அஜித் மற்றும் அஜித் ரசிகர்கள் பற்றி மனம் திறந்த ஷரத்தா ஸ்ரீநாத்.! அதுவும் முக்கியமான நாளில்.

shartha-srinath
shartha-srinath

தமிழ் சினிமா உலகில் ஒரு திரைப்படம் திரையரங்கில் வெளிவந்தது நல்லதொரு லாபத்தையும் வரவேற்பையும் பெற்று விட்டால் அத்திரைப்படத்தை எத்தனை வருடங்கள் ஆனாலும் மக்கள் அதனை வரவேற்பது உண்டு

அப்படி தமிழ் சினிமாவில் தல அஜித் நடித்து மாபெரும் ஹிட்டடித்த திரைப்படமான நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி இத்துடன் ஒரு வருடங்கள் ஆகிறது இதனை அஜீத் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர்.

மேலும் இப்படத்தில் நடித்த பலரும் அதற்கு உற்சாகமாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் ஷரத்தா ஸ்ரீநாத் அவர்கள்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ajith
ajith

நான் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய கவுரவம் அதைவிட தல அஜித்துடன் இணைந்து நடித்தது தனக்கு மிக மிக கவுரவம் உள்ளது பலர் பேசத் தயங்கும் விஷயங்களை இப்படத்தில் தெள்ளத்தெளிவாக அவர் பேசினார் அஜித் தமிழ் சினிமாவில் பல தடைகளைத் தாண்டித்தான் நடித்துவருகிறார் அதுபோல இப்படத்திலும் நடித்தார்.

மேலும் அவர் தல அஜித் ரசிகர்களுடன் இணைந்து நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்தது மிக மகிழ்ச்சியாக உள்ளது எனக்கூறி புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.