தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகிய இவன் தந்திரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விக்ரம் வேதா என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.
காற்று வெளியிடை திரைப்படத்திலும் நடித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் 2019ஆம் ஆண்டு தல அஜித்துடன் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். இந்த திரைப்படம் இவருக்கு அடுத்த பட வாய்ப்பை பெற்று கொடுத்தது.
தற்பொழுது ஷரத்தா ஸ்ரீநாத், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஷுரத்தா ஸ்ரீநாத் அவர்களுக்கு பைக் ஓட்டத் தெரியாமல் கீழே விழுந்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது கடந்த 2014ஆம் ஆண்டு நந்தி ஹீல்ஸில் நடைபெற்ற ஷூட்டிங்கில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக புல்லட் ஓட்ட தெரியுமா என கேட்டுள்ளார் அதற்கு தெரியாது எனக் கூறினேன். அதனால் பைக் எப்படி ஓட்டுவது என்று பயிற்சி எனக்கு சொல்லிக் கொடுத்தார்கள்.
At End 😕#RoyalEnfield Love 🖤 pic.twitter.com/A8P31HKxRF
— Shraddha (@Shraddha_Offi) March 2, 2021
அதன் பின்னர் நான் பைக்கை ஓட்டி செல்லும்பொழுது எப்படி விழுந்தேன் என்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள். இந்திய சினிமாவில் மிகவும் போல்டான கதாபாத்திரம் என்றால் பைக் ஓட்ட தெரிவது மிகவும் அவசியம் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் புல்லட்டில் இருந்து கீழே விழும் பொழுது யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை எனவும் கீழே விழுந்தவுடன் புல்லட் இருக்கு எந்த சேதாரமும் இல்லையா என்பதை தான் அனைவரும் பார்த்தார்கள் எனவும் அவர் பதிவிட்டுள்ளார். மேலும் ராயல் என்ஃபீல்டு ஏன் இவ்வளவு வெயிட்டாக இருக்கிறது எனவும் கேள்வி கேட்டுள்ளார்.
— Naveen (@NaveenjkvJ) March 2, 2021
இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது இதற்கு ரசிகர்கள் வடிவேல் மீம்ஸ் கிரியேட் செய்து புல்லட் பாண்டி என கலாய்த்து வருகிறார்கள்.
Pudura.. Pudura.. Moment 😅😂
— Ruban (@rubanbaskaran) March 2, 2021