சுவாரஸ்யமான நிகழ்வுகளுடன் ரசிகர்களை எதிர்பார்க்க வைக்கும் வகையில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது முதல் நாமினேஷனாக சாந்தி மாஸ்டர் பிக்பாஸ் வீட்டை விட்டு குறைந்த ஓட்டுகளை பெற்று வெளியேறி இருக்கிறார்.
இந்நிகழ்ச்சி ஆரம்பத்தில் மகேஸ்வரி ஓவராக பேசுகிறார் எனவே ரசிகர்கள் இவரை வெளியேற்ற வேண்டும் என கூறி வந்தார்கள். இவரை தொடர்ந்து தனலட்சுமியை கூஞ வந்தார்கள் திடீரென சாந்தி மாஸ்டர் இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் சாந்தி மாஸ்டர் பிக்பாஸ் வீட்டில் பெரியதாக எந்த ஒரு சுவாரசியத்தையும் ஏற்படுத்தவில்லை இதன் காரணமாக தான இவருக்கு குறைவான ஓட்டுகள் கிடைத்திருக்கிறது என பலர் கருத்து கூறி வருகிறார்கள். இவ்வாறு பிக் பாஸ் வீட்டில் முதல் போட்டியாளராக இவர் வெளியேறி இருந்தால் இவருக்கு இந்த இரண்டு வாரங்களின் நல்ல சம்பளமே கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவினை பெற்று வந்த ஜி.பி.முத்துவை விட இவருக்கு நல்ல சம்பளம் கிடைத்திருக்கிறதாம் அதாவது சாந்தி மாஸ்டருக்கு ஒரு நாளைக்கு 21 ஆயிரத்திலிருந்து 26 ஆயிரம் வரை சம்பளமாக பேசப்பட்டு இருந்தது அதில் 25 ஆயிரம் சம்பளத்தை வைத்துக் கொண்டால் கூட இவருக்கு 15 நாள் நாட்களில் 3 லட்சத்து 75 ஆயிரம் சம்பளம் கிடைத்துள்ளது.
இரைத்தொடர்ந்து ஜிபி முத்துவை விட இவருக்கு கிடைத்த சம்பளம் மிகவும் அதிகம் தான் ஏனென்றால் ஜி.பி முத்துவுக்கு ஒரு நாளைக்கு 15,000 மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டது அந்த வகையில் இவர் 14 நாட்கள் இந்நிகழ்ச்சியில் பயணித்தார் இதன் மூலம் இவர் 2 லட்சத்து 10 ஆயிரம் சம்பளமாக பெற்றிருக்கிறார் ஜி.பி முத்துவை பொருத்தவரை அவருக்கு இது அதிகம் தான் இருந்தாலும் சுவாரஸ்யம் இல்லாத போட்டியாளரான சாந்தி மாஸ்டருக்கு குறைவாகவே கொடுத்திருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.