முத்தக்காட்சியில் ரொமான்ஸ் வரல வாந்தி தான் வந்தது.! விக்ரமுடன் லிப்-லாக் காட்சி குறித்து கூறிய முன்னணி நடிகை.!

vikram
vikram

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஐஸ்வர்யா இவர் பழம்பெரும் நடிகையாக வலம் வந்த லட்சுமியின் மகள் ஆவார் இவர் வேறு யாரும் கிடையாது இவரின் பெயர் சார்ந்த மீனா தான். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் தன்னுடைய நடிப்புத் திறமையை நிரூபித்து வந்தவர்.

அதன் பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால் குணச்சித்திர வேடத்தில் நடித்தும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தும் தனக்கான இடத்தை மீண்டும் தக்க வைத்துக் கொண்டார் அதுமட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் தொடர்ந்து நிகழ்ச்சிகளிலும் தொடர்களிலும் நடித்து வருகிறார் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒளிபரப்பப்பட்டு வந்த நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.

தன்னுடைய சினிமா பயணத்தை 1989ஆம் ஆண்டு தொடங்கினார் முதன்முதலில் தெலுங்கு சினிமா மூலம்தான் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து தமிழில் ஞாயங்கள் ஜெயிக்கட்டும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்  அதன்பிறகு தமிழில் மில் தொழிலாளி, தையல்காரன் மரிக்கொழுந்து, என பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் பாக்கியராஜ் நடிப்பில் மாபெரும் ஹிட்டடித்த ராசுகுட்டி என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அதில் மீரா என்ற திரைப்படத்தில் லிப்-லாக் காட்சி ஒன்று எடுக்கப்பட்டது அப்பொழுது நடந்த இக்கட்டான சூழ்நிலையை  தற்போது பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது அது ரொமான்ஸ் காட்சியை கிடையாது அப்பொழுது எங்களுக்கு ரொமான்ஸை வரவில்லை ஸ்டுடியோவில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் இருக்கும் அதில் டெக்னிசியன் கேமராமேன் என எல்லோரும் காலை வைத்து நடந்திருப்பார்கள்.

அந்த தண்ணீரில் நடிகர் விக்ரம் என்னை முக்கி எடுத்து ஆத்திரத்தில் முத்தம் கொடுப்பது போல் ஒரு காட்சி அந்த காட்சி எடுக்கும் பொழுது கொஞ்சம் கூட எங்களுக்கு ஒரு ரொமான்ஸ் வரவே இல்லை வாந்தி தான் வந்தது. ஏனென்றால் பலரும் கால் வைத்து நடந்த தண்ணீர் வாய்குல்லேயும் மூக்கு குள்ளேயும் சென்றது அதுமட்டுமில்லாமல் அந்த தண்ணீரில் முக்கி எடுக்கும் பொழுது நான் மூச்சை தம் கட்டி கொள்வேன் அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எங்கிருந்து ரொமான்ஸ் வரும் மிகவும் கஷ்டப்பட்டோம் அந்தக் காட்சிக்காக.

மேலும் அவர் கூறுகையில் விக்ரம் மற்றும் நானும் எப்பொழுதும் கீரியும் பாம்பும் ஆக தான் இருப்போம் சண்டை போட்டுக்கொண்டே இருப்போம் அதனால் படக்குழு அடிக்கடி எங்களிடம் இதேபோல் இருக்காதீர்கள் என கூறுவார்கள் ரொமான்ஸ் காட்சி எடுக்க வந்தால் நீங்கள் இப்படி செய்கிறீர்களே கொஞ்சமாவது கெமிஸ்ட்ரி வேண்டாமா என கேட்டார்கள் படக்குழு.

ஒருநாள் கொடைக்கானல் சென்றோம் அப்பொழுது அங்கு விக்ரம் பழங்களை எல்லாம் வாங்கி வந்தார் அப்பொழுது நான் அதை வைத்து ஜூஸ் செய்து கொடுத்தோம் அந்த சமயத்தில்தான் விக்ரம் நானும் சகஜமாக பேச ஆரம்பித்தோம் அதன் பிறகு நாங்கள் இருவரும் நண்பர்களாக மாறினோம் இப்படி சினிமா வாழ்க்கைப் பயணத்தை சாந்தி மீனா பெட்டியில் கூறியுள்ளார்.

aishwarya-bhaskaran
aishwarya-bhaskaran