தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருபவர் தளபதி விஜய், இவர் தன்னுடைய உறவினர் பெண்ணான சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகள் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து வருகிறார்கள்.
இந்தநிலையில் இந்த தம்பதிக்கு ஜாசன் சஞ்சய், திவ்யா சாஷா என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள், தளபதி விஜய் தன்னுடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் திருமண விழா மற்றும் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வார்.
இந்த நிலையில் அப்படி ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் விஜய், அது வேறு யாரும் இல்லை நடிகர் சாந்தனு மற்றும் கிக்கியின் திருமண நிகழ்ச்சி தான்,
இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் சாந்தனு கீர்த்திக்கு தாலி எடுத்து கொடுத்ததே தளபதி விஜய் தான். சாந்தனுவின் திருமணம் முடிந்த பிறகு சில நாட்கள் கழித்து சாந்தனு தனது மனைவியுடன் பேட்டி ஒன்றை கொடுத்தார் அந்த பேட்டியில் என் திருமணத்தின்போது விஜய் எங்களுக்கு தாலி எடுத்துக் கொடுத்தவர் எனக் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது எங்கள் திருமணம் முடிந்த பிறகு விஜய் அண்ணா வீட்டிற்கு சென்றோம் அப்போது சங்கீதா அண்ணியிடம், விஜய் நான் தாலி எடுத்துக் கொடுத்தேன் என்று கூறியதும் சங்கீதா விஜய்யை போட்டு திட்டி விட்டாராம்.
இந்த விஷயத்தை தளபதி விஜய் தன்னிடம் கூறியதாக வெளிப்படையாக சாந்தனு கூறியுள்ளார் இந்த பேட்டியில்