விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ள சாந்தனு பாக்யராஜ் பீஸ்ட் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் நடிகர் ஆரி மேடையில் பேசியதை ஷேர் செய்து ஆதரவு தெரிவித்து வருகிறார் இந்த தகவல் அஜித் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமில்லாமல் ப்ளூ சட்டை மாறன் அவர்களுக்கும் நடிகர் சாந்தனுவுக்கு இடையே மோதலும் ஏற்பட்டுள்ளன.
பொதுவாக ஒரு புதிய திரைப்படம் வெளியாகிறது என்றால் அதனை பலரும் விமர்சனம் செய்வார்கள் அதில் பிடித்தது பிடிக்காதது என அனைத்தும் கூறுவார்கள் இந்த நிலையில் எந்த ஒரு ஒளிவு மறைவும் இல்லாமல் புது படங்களை தாறுமாறாக கிழித்து தொங்க விட்டு வருகிறார் ப்ளூ சட்டை மாறன் இதற்கு பல சினிமா பிரபலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அஜித்தின் வலிமை திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்யும் பொழுது எங்கே போனீர்கள் என சாந்தனு பாக்யராஜ் அவர்களை அஜித் ரசிகர்கள் விளாசி வருகிறார்கள். சாந்தனு பாக்யராஜ் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு படைப்பை அல்லது படைப்பாளியை பயங்கரமாக விமர்சனம் செய்வதற்கு இழிவு படுத்துவதற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாக கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் ப்ளூ சட்டை மாறனை திட்டும் விதமாக நடிகை ஆர்யா பேசிய வீடியோவையும் சாந்தனு ஷேர் செய்துள்ளார் இதை பார்த்த ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முருங்கைக்காய் chips என்ற பிட்டு படத்தில் நடித்த நடிகர் எல்லாம் இங்கு பேச கூடாது என்பதை ஓர் புதிய சண்டையை ஆரம்பித்துள்ளார்.
இதை பார்த்த அஜித் ரசிகர்கள் வலிமை திரைப்படம் வந்தபோது கோமாவில் இருந்தியா நீ அஜித்தின் வலிமை திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்யும்பொழுது வாயை திறக்கவே இல்லையே அப்பொழுது கோமாவில் இருந்தீங்களா என கண்டபடி திட்டி தீர்த்து வருகிறார்கள். இதற்கு சாந்தனு பாக்கியராஜ் நடிகர் அஜித் பாடி சேவிங் பண்ணும் பொழுது அதற்கு எதிராக பேசி உள்ளேன் என்றும் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளேன் என்றும் இதெல்லாம் ஒரு வீடியோ இன்டர்வியூவில் கண்டித்தேன் எனவும் கூறியுள்ளார்.
அதற்கு ஒருத்தர் கூறினார் எதற்கு இதெல்லாம் பேசுற நீ என்ன சொன்னாலும் நோட்டா சொல்வதற்கு நாலு பேர் வருவாங்க எனக் கூறியுள்ளார் இருந்தாலும் சாந்தனு பாக்யராஜ் அவர்களை கிழித்து தொங்க விட்டு வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.