பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி கமல் விஜய் அர்ஜுன் போன்ற டாப் ஹீரோக்களை வைத்து சூப்பரான படங்களை கொடுத்துள்ளார். மீண்டும் தமிழில் சூப்பரான ஹீரோக்களை வைத்து படங்களை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ஷங்கர்.
தெலுங்கு பக்கம் திசை திரும்பி ராம்சரணை வைத்து RC 15 என்ற பெயர் வைக்கப்படாத ஒரு படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் சங்கர் பாதியில் போட்டுவிட்டு போன இந்தியன் 2 படத்தை மீண்டும் தொடங்குவார் என தெரிய வருகிறது.
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது கமலும் இந்த படத்தில் நடித்து கொடுக்க ரெடியாக இருக்கிறாராம். இந்தியன் 2 மற்றும் RC 15 ஆகிய படங்களை முடித்துவிட்டு ரன்வீர் சிங்குடன் அந்நியன் ரீமேக் எடுக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இது இப்படி இருக்க மறுபக்கம் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தனது கனவு படமான ஒரு நீருக்கடியில் அறிவியல் கலந்த ஒரு பிரம்மாண்ட படத்தை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த படம் எப்பொழுது தொடங்கும் என்பது தெரியவில்லை. இந்த படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடிகர் நடிகைகளை தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளார்.
ஷங்கர் அந்த வகையில் இந்த படத்தில் ஹீரோவாக பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு டாப் ஹீரோ ராம்சரண் அவருடன் இணைந்து நடிப்பார் என்ற தகவல் வெளியாக உள்ளது. இந்த படம் சுமார் 1000 கோடி பட்ஜெட்டில் ஷங்கர் எடுக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.