தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என போற்றப்படும் ஒரு இயக்குனர் என்றால் அது சங்கர்தான் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் இந்திய அளவில் மிக பிரம்மாண்டமான திரைப்படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்துள்ளார் என்பது மட்டுமில்லாமல் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு இருக்கும்.
இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் சமீபத்தில் ராம்சரணை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இவ்வாறு இவர் இயக்கத்தில் மிக பிசியாக இருக்கும் நிலையில் இவருடைய மகள் அதிதி சங்கர் அவர்கள் இப்பொழுது சினிமாவில் என்டிரி ஆகி உள்ளார்.
அந்த வகையில் அதிதி சங்கர் தற்பொழுது கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் விருமன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாக உள்ளார் இவ்வாறு இவர் முதல் முதலாக சினிமாவில் அறிமுகமாக அதன் காரணமாக இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா என்ற மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.
அது மட்டும் இல்லாமல் தற்போது நமது நடிகை நடிப்பில் ஒரு திரைப்படம் கூட திரையரங்கில் வெளியாகவில்லை இதனை தொடர்ந்து அவருடைய இரண்டாவது திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் இணையத்தில் வெளியாகி உள்ளது அதன்படி நமது நடிகை தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்த மாவீரன் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
இவர் இந்த திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடிப்பது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பை பட குழுமங்கள் வெளியிட இவற்றை வைரலாக்கி வருகிறார்கள். இவ்வாறு வெளிவந்த தகவலை பார்த்த ரசிகர்கள் பலரும் இனிமேல் முன்னணி நடிகைகள் பலருக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுமோ என அதிர்ச்சியில் உள்ளார்கள்.
ஏனெனில் தற்பொழுது முன்னணி நடிகர்கள் பலரும் புது புது முக நடிகைகளையே தங்களுடைய திரைப்படத்தில் நடிக்க வைத்து அழகு பார்க்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் இதனை தான் ரசிகர்களும் ரசிக்கிறார்கள் அந்த வகையில் இவரும் மிக விரைவில் ரசிகர் மத்தியில் பிரபலமாகி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
We are glad to have @AditiShankarofl onboard! 💐 #Maaveeran@Siva_Kartikeyan @madonneashwin @iamarunviswa @vidhu_ayyanna @bharathsankar12 @philoedit @DoneChannel1 pic.twitter.com/yVkfSenu59
— Shanthi Talkies (@ShanthiTalkies) August 3, 2022