ஷங்கர் மகள் அதிதி ஷங்கருக்கு பிடித்த டாப் ஹீரோ இவர் தானாம் – ரசிகர்கள் வெளியிட்ட தகவல்.

aditi shankar
aditi shankar

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டு ஹிட் படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் ஷங்கர் இதுவரை ரஜினி, கமல், விஜய், பிரசாந்த், அர்ஜுன் போன்ற பிரபலங்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது தற்போது இவர் தெலுங்கில் ராம்சரண் ஐ வைத்து ஒரு புதிய படத்தை எடுத்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்தையும் வெகு விரைவிலேயே எடுக்கவுள்ளார் இவரது பயணம் இப்படி ஓடிக் கொண்டிருக்க மறுபக்கம் அவரது இளைய மகள் அதிதி ஷங்கரும் சினிமா உலகில் தற்போது நடிக்க ஆரம்பித்துள்ளார் முதலாவதாக நடிகர் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து விருமன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை கொம்பன் படம் எடுத்த முத்தையா இந்த திரைப்படத்தை எடுத்து வருகிறார். இந்தப் படமும் முழுக்க முழுக்க கிராமத்து கதையை மையமாக வைத்து உருவாகி வருகிறது. அதிதி ஷங்கருக்கு விருமன் படம் முதல் படம் என்பதால் ரசிகர்கள் பட்டாளத்தை வளைத்துப்போட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த புகைப்படங்கள் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவதால் இவருக்கான ரசிகர் பட்டாளம் உருவாக தொடங்கியுள்ளது விரும்பும் திரைப்படம் வெற்றி பெறும் பட்சத்தில் அவரது மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தளபதி விஜய் புகைப்படம் மற்றும் அவரைப் பற்றி வரும் செய்திகளுக்கு லைக்குகளை செய்து வருகிறார் அதிதி ஷங்கர். இதனால் விஜய்யின் ரசிகர்கள் அதிதி ஷங்கர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் என கூறி வருகின்றனர் இது அந்த பதிவை நீங்களே பாருங்கள்.

aditi shankar
aditi shankar