90 காலகட்டங்களில் இருந்து பல்வேறு படங்களில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளி உலகத்திற்கு காட்டி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகர் சரண்ராஜ். அதிலும் குறிப்பாக நடிகர் சரண்ராஜ் ரஜினியின் பாட்ஷா, அர்ஜுனின் ஜென்டில்மேன், அஜித்தின் ஜி ஆகிய பல்வேறு படங்களில் நடித்து அசத்தியவர்.
தமிழ் சினிமாவையும் தாண்டி மற்ற மொழிகளிலும் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி ஓடிக் கொண்டிருந்தாலும் சமீபகாலமாக இவருக்கு சொல்லும்படி பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இருப்பினும் தனக்கான சிறப்பான கதாபாத்திரங்கள் வந்தால் நடிப்பேன் என காத்துக் கொண்டிருக்கிறார்.
நடிகர் சரண் ராஜ் இப்படி இருக்கின்ற நிலையில் பேட்டி ஒன்றில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து உள்ளார் அதில் அவர் கூறிய சில விஷயங்களில் தற்பொழுது பார்ப்போம். சினிமாவுலகில் ரொம்ப கஷ்டப்பட்டுதான் படிப்படியாக உயர்ந்து ஏன் அப்படி உயர உயர எனக்கு நல்ல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அப்படி எனக்கு கிடைத்த படங்களில் ஒன்று பாட்ஷா இத்திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நண்பனாக அன்வர் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பேன் முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிகை இருந்தது மலையாள நடிகர் மம்முட்டி தான் அவர் நடிக்காத பட்சத்தில் நான் நடித்தேன் என கூறினார்.
வீட்டிலிருந்து 6000 ரூபாய் பணத்தை திருடிக்கொண்டு நான் வந்தேன் என கூறினார் மேலும் பேசிய சரண்ராஜ் பேசிய இயக்குனர் சந்திரசேகர் சார் கிட்ட நிறைய ஷங்கர் அடிவாங்கி அழுதிருக்கிறார் அதை நான் பார்த்திருக்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.