தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, விஜய், பிரசாந்த், அர்ஜுன் போன்ற டாப் நடிகர்களை வைத்து பிரமாண்ட படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் ஷங்கர். படத்தின் பட்ஜெட் எவ்வளவு அதிகரிக்கிறதோ அதற்கேற்றார்போல வசூலும் தாறுமாறாக அள்ளி உள்ளது.
அதனால் தமிழ் சினிமாவில் இவரை செல்லமாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் என செல்லமாக ரசிகர்கள் அழைப்பது வழக்கம். இயக்குனர் ஷங்கர் தமிழில் கடைசியாக ரஜினியை வைத்து 2.0 என்ற திரைப்படத்தை கொடுத்திருந்தார் இந்த திரைப்படம் சுமார் 800 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த அசத்தியது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் மீண்டும் டாப் நடிகர்களை வைத்து படங்களை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தெலுங்கு ஒரு பக்கம் அடியெடுத்து வைத்துள்ளார் ஏன் என்று நினைக்கிறீர்களா. முதலில் தமிழில் நடிகர் கமலை வைத்து இந்தியன் 2 படத்தை எடுத்துக் கொண்டு வந்திருந்தார்.
எதிர்பாரதவிதமாக படத்தின் சூட்டிங்கில் விபத்து ஏற்படவே பின் இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது ஒரு கட்டத்தில் இந்த படம் எடுப்பார்கள் எடுக்க மாட்டார்களா என்ற நிலை நிலவியதால் உடனே இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரண்ணுக்கு கதை சொல்லி அங்கு கமிட்டானார்.
பூஜை போடப்பட்டு தற்போது படத்தின் படப்பிடிப்பு மிகத் தீவிரமாக நடந்து வருகிறது இந்த திரைப்படத்தில் ராம்சரண், கியாரா அத்வானி மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஷங்கர் இந்த படத்தின் ஒரு பாடலை பிரம்மாண்ட முறையில் எடுக்க ஒரு செட் ஒன்றை போட்டுள்ளார்.
அந்த செட்டின் மதிப்பு மட்டுமே பல கோடி ஆகும் அதாவது அந்த படத்தின் பாடல்களுக்கு அவர் போட்டுள்ள செட்டின் மதிப்பு மட்டும் 23 கோடி என கூறப்படுகிறது இதை அறிந்த சினிமா இயக்குனர்கள் மற்றும் பிரபலங்கள் இதை வைத்து ஒரு படமே எடுத்திருக்கலாம் எனக் கூறி ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.