நடிகர் எஸ்.ஜே சூர்யா அண்மைக்காலமாக ஹீரோ, வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து அசதி வருகிறார் இவர் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்களாக இருக்கிறது மேலும் இவரது நடிப்பு பெரிய அளவில் ரசிகர்கள் பார்த்து கொண்டாடப்பட்டு வருகிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான டான்.
இத்திரைப்படத்தில் இவரின் நடிப்பு வேற லெவலில் இருந்ததாக கூறப்படுகிறது அதனைத் தொடர்ந்து பல்வேறு புதிய படங்களில் நடித்திருக்கிறார் ஒவ்வொரு திரைப்படமும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் புதிய படம் ஒன்றில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா கமீட்டாகி விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
அந்த படத்தில் ஹீரோவாக ராம்சரண் நடித்து வருகிறார் தற்பொழுது இந்த படத்திற்கு RC 15 என பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்த பட்டத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு போய்க்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது இதுவரை தெரியப்படாமல் படக்குழு ரகசியமாக வைத்திருக்கிறது.
நடிகர் எஸ் ஜே சூர்யா ஒவ்வொரு படம் ஹிட் அடிக்கும் போதும் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி வருகிறார் அந்த வகையில் ராம்சரண் – ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தில் எஸ் ஜே சூர்யா நடிக்கிறார் இந்த படத்திற்காக சுமார் 7 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தெலுங்கில் இப்பொழுது தான் எஸ்.ஜே. சூர்யா காலடி எடுத்து வைக்கிறார். அதற்குள் ஏழு கோடி சம்பளம் கொடுப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கிறது. இதிலும் ஒரு ரகசியம் மறந்திருக்கிறது அதாவது இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிறது. எஸ் ஜே சூர்யாவுக்கு என இப்பொழுது ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதை கணக்கில் எடுத்துக் கொண்டுதான் எஸ்.ஜே. சூர்யாவுக்கு இவ்வளவு பணம் கொடுத்துள்ளதாக ஒரு பக்கம் கூறப்படுகிறது.