ஷங்கர், ராம்சரண் : படத்தின் ஷூட்டிங் அடுத்து எங்க தொடங்க இருக்கு தெரியுமா.? சந்தோஷத்தில் ரசிகர்கள்.

rc-15
rc-15

தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு பிரம்மாண்ட ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் ராம்சரண். இதுவரை இவர் எத்தனையோ படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலான திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தும் உள்ளன .

தற்போது இவர் 15வது திரைப்படத்தை தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் ஷங்கர் உடன்  முதல் முறையாக ராம்சரணுடன் கைகோர்த்து பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்துள்ள இந்த திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது.

அதாவது இந்த படத்தின் பட்ஜெட் 120 கோடி என தெரிய வந்துள்ளது. இந்தப் படத்தில் ராம்சரண்னுக்கு  ஜோடியான கதாபாத்திரத்தில் கியாரா அத்வானி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் தான் இந்த படத்தின் பூஜை போடப்பட்டு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புஅக்டோபர் மாதம் 22ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் தொடங்கப்பட்டது ஒருவழியாக இன்றுடன் படப்பிடிப்பு முடிவடைகிறது.  அடுத்த கட்ட ஷூட்டிங் நடத்துவதற்கு முன்பாக தீபாவளி வர உள்ளதால் படக்குழு சிறிது விடுமுறை கொடுத்து உள்ளது .

தீபாவளி முடிந்த பிறகு ஹைதராபாத்தில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பை தொடங்கலாம் என படக்குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழு மற்றும் ரசிகர்களும் சற்று சந்தோஷத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.