பொன்னியின் செல்வன் ஆடியோ லாஞ்சில் “இந்தியன் 2” படம் குறித்து முதல் முறையாக வாய் திறந்த ஷங்கர்.!

indian
indian

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் பல படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளார் இவர் இப்பொழுது தெலுங்கில் ராம் சரணை வைத்து RC 15 என்னும் படத்தை எடுத்து வருகிறார் இந்த படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு போய்க் கொண்டிருக்கிறது மறுபக்கம் இந்தியன் 2 படத்தின் மீதி ஷூட்டிங்கையும் தற்போது தொடங்கி உள்ளார்.

இந்தியன் 2 படத்தின் சூட்டிங் பல வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு இருந்தாலும் தொடர்ந்து அப்பொழுது இந்த படத்தின் ஷூட்டிங் போது விபத்துகளும் பிரச்சனைகளும் வந்ததால் ஒரு சமயத்தில்  படப்பிடிப்பு தொடங்காமல் போனது இதனால் கமலும் சரி சங்கரும் சரி வேறு வேறு படங்களில் கமிட் ஆகினர்.

இதனால் இந்தியன் 2 படம் அவ்வளவுதான் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் பல்வேறு கேசுகளை போட்டு பிரச்சனைகளை முடித்து தற்பொழுது ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியன் 2 படத்தில் கமலுடன் கைகோர்த்து காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, டெல்லி கணேஷ், சார்ஜ் மரியின்.

மற்றும் ஜெய பிரகாஷ், யோகி பாபு, மனோபாலா மற்றும் பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் சூட்டிங் போய்க்கொண்டிருப்பதாக நமக்கு தகவல்கள் கிடைத்து இருக்கின்றன இந்த நிலையில் நேற்று பொன்னியின் செல்வன் டிரைலர் மற்றும் ஆடியோ லாஞ்ச் நடத்தப்பட்டது இதில் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் சிறப்பு விருந்தினராக ரஜினி, கமல், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அப்பொழுது இந்தியன் 2 படம் குறித்து பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது அண்மையில் சூட்டிங் தொடங்கப்பட்டது அந்த சூட்டிங் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. அடுத்த கட்ட ஷூட்டிங்காக படக்குழு ரெடியாக உள்ளது. அடுத்த கட்ட ஷூட்டிங்  வெகுவிரைவிலேயே தொடங்க உள்ளதாக கூறியுள்ளார்.