கதை சூப்பராக இருந்தும் ஷங்கர் படத்தை வேண்டாம் என தூக்கி எறிந்த சரத்குமார்.. எந்த படம் தெரியுமா.?

gentle man

தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் என அழைக்கப்படுபவர் சரத்குமார் ஆரம்பத்தில் பல வெற்றி படங்களை கொடுத்து ஓடிய இவர் தற்போது வயது முதிர்வின் காரணமாக டாப் ஹீரோக்களின் படங்களில் குணச்சித்திரம் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் கடைசியாக வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்திருந்தார்.

இப்படி சினிமா துறையில் ஓடிக்கொண்டிருக்கும் இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் படத்தையே நிராகரித்து உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. நடிகர் சரத்குமாரின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களில் ஒன்று “சூரியன்” இந்த படத்தை  பவித்திரன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் பவித்திரனுக்கு உதவிய இயக்குனராக ஷங்கர் வேலை பார்த்தார்.

ஆனால் அதன் பிறகு வெளியே வந்த ஷங்கர் “ஜென்டில்மேன்” படத்தின் கதையை எழுதி இருந்தார்.  படத்தில் சரத்குமாரை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என ஷங்கர் திட்டம் போட்டு இருந்தார் ஆனால் அந்த சமயத்தில் தயாரிப்பாளர்கள் மட்டும் கிடைக்கவே இல்லை.. ஒரு வழியாக இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர் கே டி குஞ்சு மோகனிடம்  “ஜென்டில்மேன்” படத்தின் கதையை சொல்லி ஓகே வாங்கினார்.

பிறகு தயாரிப்பாளர் குஞ்சு மோகன் ஒரு குறிப்பிட்ட தொகையை அட்வான்ஸ் ஆக கொடுத்தாராம். அதை எடுத்துக்கொண்டு சரத்குமாரை ஒப்பந்தம் செய்யலாம்  என ஷங்கர் போனாராம் இந்த சமயத்தில் தான் பவித்திரன் “ஐ லவ் யூ இந்தியா” என்ற திரைப்படத்தில் சரத்குமாரை ஒப்பந்தம் செய்வதற்காக அணுகி இருக்கிறார்.

gentle man
gentle man

இதனால் சரத்குமார் யாருடன் கைகோர்ப்பது என்பது பெரிய சிக்கல் ஏற்பட்டது ஆனால் பவித்திரன் இதற்கு முன்பாக சரத்குமாரை வைத்து “சூரியன்” என்னும் பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்ததால் சரத்குமார் வேறு வழியில்லாமல் பவித்திரனுக்கு ஓகே சொல்லி.. ஷங்கரை கழட்டிவிட்டாராம் அதன் பிறகு ஷங்கர் நவரச நாயகன் கார்த்திக் உட்பட பல நடிகர்களை ஜென்டில்மேன் திரைப்படத்தில் படிக்க வைக்க முயற்சி செய்தார் கடைசியாக அர்ஜுன் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் அடித்ததாம்.