தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் நடிகர் சங்கர் இவர் கமல் நடித்து வந்த இந்தியன்2 திரைப்படத்தை இயக்கி வந்தார். ஆனால் ஒரு சில பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் பாதியிலேயே கிடப்பில் கிடக்கிறது.
இதெல்லாம் ஓரங்கட்டிவிட்டு சங்கர் தெலுங்கு சினிமா பக்கம் தனது பார்வையை திசை திருப்பியுள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகர் ராம்சரண் உடன் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தை தில் ராஜி என்ற தயாரிப்பாளர் தயாரிக்க இருக்கிறார்.
இந்த திரைப்படம் பிரமாண்டமாக உருவாக இருக்கிறது ஆனால் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஸ்ட்ரிக்டாக ஒரு கண்டிஷன் போட்டுள்ளார் அதாவது குறிப்பிட்ட பட்ஜெட் மட்டுமே இந்த திரைப்படம் எடுத்து முடிக்க வேண்டும் பட்ஜெட்டை மீறினால் அஞ்சு பைசா கூட தரமாட்டேன் என சங்கரிடம் எழுதி வாங்கி விட்டாராம் தயாரிப்பாளர்.
அதனால் தன்னுடைய இந்த திரைப்படத்தை மிகவும் சிக்கனமாக இயக்க வேண்டும் என்ற கால கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் சங்கர். மேலும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக தெலுங்கு சினிமாவின் சென்சேஷன் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா இந்த திரைப்படத்தில் இணைந்து உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்.
சமீபகாலமாக ராஷ்மிகா மந்தனாவிற்கு பல பட வாய்ப்புகள் அமைந்து வருகிறது தென்னிந்திய சினிமாவில் இவர் மட்டும்தான் நடிகையாக இருக்கிறாரோ என்னமோ தயாரிப்பாளர்கள் பலரும் இவரையே புக் செய்து வருகிறார்கள்.
ராஷ்மிகா மந்தனாவை தெலுங்கு சினிமா மொத்தமும் ஒப்பந்தம் செய்ய என்ன காரணம் என்று தெரியாமல் கோலிவுட் வட்டாரம் குழம்பி கிடக்கிறது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரையே ரஷ்மிகா மந்தனா கவர்ந்து விட்டார் என்பதுதான் உண்மை.