சினிமாவுலகில் இயக்குனராக என்ட்ரி ஆனதில் இருந்து தற்போது வரையிலும் மிகப் பெரிய பட்ஜெட் படங்களை எடுத்து அதில் வெற்றி கண்டு வருகிறார் இயக்குனர் ஷங்கர் இவரை தொடர்ந்து பிறமொழி இயக்குனர்களும் மிகப் பெரிய பட்ஜெட் படங்களை தயங்காமல் எடுத்து அதில் வெற்றி கண்டு வருகின்றனர்.
ஷங்கர் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து வருகிறார். ஷங்கர் திரைப்படங்களும் வசூலிலும் அதிக வசூல் செய்து உள்ளன அந்த வகையில் ஜெண்டில்மேன், இந்தியன், அந்நியன், சிவாஜி, எந்திரன் போன்ற அனைத்து படங்களும் இவருக்குப் பெயரையும் புகழையும் பெற்றுத் தந்ததோடு வசூல் வேட்டையும் நடத்தியதால் தொட முடியாத உச்சத்தில் சங்கர் இருக்கிறார்.
ஷங்கர் இந்தியன் படம் கமலை வைத்து எடுத்து இருந்தார் இது பிரம்மாண்ட வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து பல வருடங்கள் கழித்து மீண்டும் கமலை வைத்து இந்தியன் 2 என்ற திரைப்படத்தை எடுக்க அசை பட்டார் ஆரம்பத்தில் இவர் நினைத்தது எல்லாம் நடந்தாலும் சூட்டிங்கில் சில தவறுகள் ஏற்பட்டதால் இந்தியன் 2 பாதியிலேயே போட்டு விட்டு கமலும், ஷங்கரும் தனது மற்ற வேலையை செய்ய தொடங்கினர்.
அதிலும் குறிப்பாக ஷங்கர் நேரத்தை வேஸ்ட் ஆகாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி பக்கங்களில் அடுத்தடுத்த டாப் நடிகர்களுக்கு கதை சொல்லி ஓகே செய்து வைத்துள்ளார் அந்த வகையில் தெலுனு சினிமாவில் டாப் நடிகரான ராம்சரனை வைத்து தெலுங்கில் ஒரு புதிய படத்தை எடுக்க அவரிடம் கதை சொன்னார் அவரும் ஓகே என்று சொன்னார்.
இதற்கு இடையில் லைக்கா நிறுவனம் இந்தியன் 2 படத்தை எடுக்காமல் ஷங்கர் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் எந்த படத்தையும் எடுக்க கூடாது என நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது இது விரைவில் வழக்கு வர உள்ளது.
இப்படியிருக்க ஷங்கர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ராம்சரண் வைத்து படத்தை இயக்க ரெடியாக இருக்கிறார் இந்த திரைப்படத்தை ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய அளவில் எடுக்க ஒப்பந்தமாகி உள்ளது இந்த திரைப்படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக இந்தி பட நடிகையான ஆலியா பட் இந்த படத்தில் கமிட் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.