இயக்குனர் ஷங்கர் – ராம் சரண் படத்தின் டைட்டில் இதுவா.? கொல மாஸா இருக்கு..

RC-15
RC-15

சினிமா உலகில் பிரமாண்ட பட்ஜெட்டில் படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர்கள் ஒரு சிலர் தான் அவர்களில் முதன்மையானவராக இருப்பவர் இயக்குனர் ஷங்கர். இவர் தனது சினிமா பயணத்தை ஆரம்பத்திலிருந்து இப்போது வரையிலும் தொடர்ந்து பிரமாண்ட பட்ஜெட்டில் பல படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளார்.

இதுவரை  தமிழ் சினிமாவில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் விக்ரம், அர்ஜுன்,ரஜினி, விஜய், கமல் போன்ற டாப் ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கிய அசத்தினார். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தமிழில் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 2.0 என்ற படத்தை எடுத்தார்.

படம் வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த நிலையில் மீண்டும் தமிழ் சினிமா நடிகர்களை வைத்து படங்களை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தெலுங்கு பக்கம் தனது திசை திருப்பியுள்ளார் முதலில் ராம் சரணை வைத்து ஒரு புதிய படத்தை எடுத்து வருகிறார்.

அந்த படத்திற்கு  RC 15 என்ற தலைப்பு வைக்கப்பட்டு படம் உருவாக்கப்பட்டு வருகிறது இந்த படத்தில்  ராம்சரணுடன் கைகோர்த்து கியாரா அத்வானி மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ராம்சரண் இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ராம்சரண் ஒரு கதாபாத்திரத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளும் மற்றொரு கதாபாத்திரத்தில் கிராமத்து விவசாயகவும் வலம் வருகிறார்.

இந்த திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகுவதால் இந்த படத்தின் தலைப்பு மிக சிறப்பாக இருக்க வேண்டும் என படக்குழு முடிவு எடுத்தது நீண்டநாள் யோசித்து ஒரு புதிய தலைப்பை படக்குழு உறுதியாக செலக்ட் செய்த உள்ளது அதாவது இந்த படத்திற்கு “அதிகாரி” என தலைப்பு வைக்க இருகிறதாம். அதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது.