வெள்ளித்திரையில் தற்பொழுது உள்ள இயக்குனர்களில் ஒரு முக்கியமான இயக்குனராக தமிழ் சினிமா உலகில் வலம் வருபவர் தான் ஷங்கர். இவர் தற்போது ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி கதை களம் கொண்ட கதைகளை இயக்கிய நிறைய ஹிட்டடிக்கும் திரைப்படங்களை கொடுத்து வருகிறார்.
மேலும் இவர் முதலில் சூர்யன் படத்தை இயக்கிய பவித்ரன் என்ற இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த பின்புதான் இவர் 1993 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தை இயக்கி இருப்பார்.
இந்த படம் திரையரங்குகளில் வெளியான போது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல வசூல் செய்து சாதனை படைத்து ஷங்கர் இயக்கிய முதல் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து விட்டது.
இந்த திரைப்படத்தை பற்றி தற்போது ஒரு தகவல் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது ஆம் அந்த தகவல் என்னவென்றால் இந்த திரைப்படத்தில் முதலில் கதாநாயகனாக நடிக்க சரத்குமாரிடம் சென்றதாம் ஆனால் அப்போது சரத்குமார் மறுத்து விட்டாராம்.
இந்த தகவலைப் பற்றி சாரத்குமார் ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் கூறியுள்ளார் அதில் நான் சூர்யன் திரைப்படத்தில் நடித்து வரும் போதே ஷங்கர் என்னிடம் ஜென்டில்மேன் கதையை கூறியிருந்தார்.
#Sarathkumar About #Mudhalvan pic.twitter.com/GLzlCNdaq2
— chettyrajubhai (@chettyrajubhai) April 11, 2021
அந்த சமயத்தில் எனக்கு சூர்யன் திரைப்படத்திலும் ஜென்டில்மேன் திரைப்படத்திலும் ஒரே மாதிரி நடிப்பது போல் இருந்தது அதுமட்டுமல்லாமல் ஷங்கர் ஜென்டில்மேன் திரைப்படத்திற்காக மீசையை எடுக்க சொன்னார் ஆனால் சூர்யன் திரைப்படத்தில் நடித்து வந்ததால் என்னால் அதை செய்ய முடியவில்லை.
இதனையடுத்து பவித்ரன் எனக்கு தெரியும் என்பதால் சூர்யன் படத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளாராம் சரத்குமார்.
மேலும் ஜென்டில்மேன் திரைப்படத்திற்காக சரத்குமார் போட்டோ ஷூட்கள் செய்தாராம் ஆனால் பவித்திரனுக்காக திரைப்படத்தையே விட்டு கொடுத்து விட்டராம்.
இதற்குப் பின்புதான் அர்ஜுன் இந்த திரைப்படத்தில் மிரட்டலாக நடித்திருப்பார்.