தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கமலஹாசன் இவ்வாறு பிரபலமான நமது நடிகரை ரசிகர்கள் உலகநாயகன் என்று போற்றி வருகிறார்கள் அந்த வகையில் இவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் வசூலில் 400 கோடியை மிஞ்சியது மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியால் கிடப்பில் உள்ள இந்தியன் 2 திரைப்படத்தையும் விரைவில் வெளியிட வேண்டும் என பட குழுவினர்கள் முடிவு செய்துள்ளார்கள்.
அந்த வகையில் இந்த திரைப்படத்தின் படபிடிப்பானது வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாக பட குழுமங்கள் தெரிவித்தது மட்டுமில்லாமல் இதற்கான ஆரம்பகட்ட பணிகள் சமீபத்தில் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக பட குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் இந்த திரைப்படத்தில் நெடுமுடி வேணு மற்றும் விவேக் ஆகிய இருவரும் நடித்துள்ளார்கள் ஆனால் அவர்கள் இருவரும் தற்பொழுது காலமாகிவிட்டார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் இந்நிலையில் இவரது காட்சியை வேறொரு நடிகர் களை வைத்து மீண்டும் படமாக்குவார்களா? இல்லை நீக்குவார்களா? என்பதை நாம் பார்த்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அதேபோல இந்த திரைப்படத்தில் நடித்த காஜல் அகர்வால் அவர்கள் திருமணமாகி தற்பொழுது குழந்தை பெற்றுவிட்டதால் இந்த திரைப்படத்தில் மீண்டும் தொடர்ந்து நடிப்பாரா என்பதும் சந்தேகத்தில் உள்ளது. ஆனால் இதற்கான மாற்றுத்திறன் இயக்குனர் சங்கரிடம் உள்ளதாகவும் படப்பிடிப்பில் எந்த ஒரு பிரச்சனையும் வராது எனவும் கூறப்படுகிறது.
மேலும் இந்தியன் 2 திரைப்பட படப்பிடிப்பு அறுபது சதவீதம் முடிவடைந்த நிலையில் இவ்வரிடத்தில் மீதமுள்ள படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த ஆண்டு ரிலீஸ் செய்ய உள்ளதாக பட குழுவினர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.