வெள்ளித்திரையில் ஹிட்டடிக்கும் திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனர்களில் முக்கியமான இயக்குனர் ஷங்கர் இவர் தமிழில் அதிக திரைப்படங்களை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.
மேலும் ஷங்கர் அடுத்ததாக ராம் சரணை வைத்து பான் இந்திய திரைப்படத்தை ஒன்றை இயக்க உள்ளாராம் அதற்காக அந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக RC15 என பெயர் வைக்கப்பட்டுள்ளதாம் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மே மாதம் இறுதியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற போகிறது என தகவல் கிடைத்துள்ளது.
ஷங்கர் பொதுவாகவே ஒரு திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு பல கோடி பட்ஜெட் செலவில் கதை எழுதுவார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று அந்த வகையில் இந்த திரைப்படத்தின் கதையும் பல கோடி பட்ஜெட்டில் எடுக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளாராம் ஆம் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த திரைப்படம் வெளியாக வேண்டும் என ஷங்கர் உறுதியாக உள்ளாராம்.
இந்த திரைப்படத்தில் 20 முதல் 25 நிமிடம் வரை ஒரு முக்கிய கதாபாத்திரம் உள்ளதாம் இதற்காக ஐந்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களாக விளங்கி வரும் ஐந்து பேரை தேர்வு செய்து இந்த திரைப்படத்தில் ஷங்கர் நடிக்க வைக்கப் போகிறாராம்.
அதே சமயம் தயாரிப்பு நிறுவனத்திலும் ஷங்கர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறாராம் இந்த திரைப்படத்தை ஐந்து மொழிகளில் 5 பேரை வைத்து எடுத்தால் சுமார் ஆயிரம் கோடி குறையாமல் வசூல் செய்யும் என தயாரிப்பு நிறுவனத்தை உசுப்பேற்றி வருகிறாராம் ஷங்கர்.
அதுமட்டுமல்லாமல் தமிழில் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்தால் நல்லா இருக்கும் எனவும் தெலுங்கில் பவன் கல்யாண் அல்லது சிரஞ்சீவி நடிக்க வாய்ப்பு இருக்கிறது எனவும் தகவல் கிடைத்துள்ளது மேலும் கன்னட மொழியில் முன்னணி நடிகராக வரும் உபேந்திர நடிகரும் மலையாளத்தில் மோகன்லாலும் இந்தியில் சல்மான்கானும் ஆகிய 5 பேரும் இணைந்து நடித்தால் படம் சரியான ஹிட்டடிக்கும் என ஷங்கர் கூறுகிறாராம்.