தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற வரும், உலக அளவில் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த பெருமையும் இயக்குனர் சங்கருக்கு உண்டு. சங்கர் தன்னுடைய படங்களில் பிரமாண்டங்களை கொடுத்து பிரமாண்ட இயக்குனர் என்ற பெயர் எடுத்து விட்டார்.
அதே போல் சங்கர் திரைப்படங்களில் பிரம்மாண்டம் என்பது அவருடைய திரைப்படங்களில் தொழில்நுட்பம் அதிகமாக பயன்படுத்தி இருப்பது தான், கணினி மூலம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இல்லை என்றாலும் ஓரளவு ஸ்கிரீன்பிளே வில் தனது திறமையை காட்டி விடுவார்.
இப்படி தற்பொழுது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் எனக் கூறுகிறோம் ஆனால் இவருக்கு முன் அந்த காலத்திலேயே பிரமாண்ட இயக்குனர் ஒருவர் இருந்துள்ளார். சங்கர் காலத்திற்கு ஏற்றவாறு பட்ஜெட்டை அதிகரித்துக்கொண்டே செல்கிறார். இந்த நிலையில் அந்த காலகட்டத்தில் பிரமாண்ட இயக்குனர் என்றால் அது ஆபாவாணன் தான் இவர் அந்த காலத்திலேயே பிரமாண்ட பட்ஜெட்டில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.
அதேபோல் இயக்குனர் ஆபாவாணன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் அலை மோதும். அதுமட்டுமில்லாமல் அந்த காலத்தில் மெகா பட்ஜெட்டில் பல திரைப்படங்களை எடுத்தவரும் இவர்தான், இவர் இயக்கத்தில் வெளியாகி ஊமை விழி திரைப்படத்தைப் பார்த்தால் உங்களுக்கே தெரியும்.
இந்த காலத்தில் சங்கர் பிரமாண்டம் என்றால் ஆபாவாணனுக்கு சங்கர் எல்லாம் சோட்டா பசங்க என கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இந்த தகவலை சித்ரா லக்ஷ்மணன் சமீபத்தில் கூறியுள்ளார். சங்கரை தான் அனைவரும் பிரமாண்ட இயக்குனர் என கூறுகிறார்கள் ஆனால் இவரைவிட ஆபாவாணன் தான் அப்பொழுது பிரமாண்ட இயக்குனர்.