வசூலை வாரி குவிக்க இந்தியன் 2 வில் பிரபல நடிகரை உள்ளே இழுத்துப் போட்ட ஷங்கர்.! மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வராதா என்ன?

indian-2
indian-2

சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இடைவேளை விட்டு இருந்த கமல் விக்ரம் திரைப்படத்தின் மூலம் தனது ஆக்ரோஷமான நடிப்பை காட்டி சினிமா ரசிகர்களை வியக்க வைத்துள்ளார். விக்ரம் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இவருடைய மார்க்கெட்டும் உயர்ந்து இருக்கிறதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சங்கர் இயக்கிய இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஒரு சில பிரச்சனையின் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர்  இந்தியன் 2 திரைப்படத்தை மறுபடியும் தூசி தட்டி மீண்டும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை லைக் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தியன் 2 படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் இந்த திரைப்படத்தில் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது இந்த நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல்ஹாசன், சங்கர் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி வைரல் ஆகியது.

மேலும் இந்தியன் 2 திரைப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், உள்ளிட்ட பலர் நடித்து வருவதாக கூறப்படுகிறது மேலும் இந்தியன் 2 திரைப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் அப்பாவான யோகராஜ் சிங்கும் கமிட்டாகி நடித்து வருவதாக கூறப்படுகிறது அது மட்டுமல்லாமல் இவர் மேக்கப் போடும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகியது.

இதனை அடுத்து மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் இந்தியன் 2 படத்திற்காக கமலுடன் இணைந்து இருப்பது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது. பாலிவுட்டில் கிட்டத்தட்ட 40 வருடங்களாக பல திரைப்படங்களில் நடித்தவர்தான் குல்ஷன் குரோவர். இவர் இந்தியன் 2 படத்தில் இணைந்துள்ளார் என்று தகவல் வெளிவந்த நிலையில் கமலுடன் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது மட்டும் இல்லாமல் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார் என்ற செய்தியை உறுதி செய்துள்ளது.

இந்தியன் 2 திரைப்படத்தில் கமலின் ஃபிளாஷ்பேக்கில் குல்ஷன் குரோவர் நடிப்பார் என கூறப்படுகிறது இதனால் ரசிகர்கள் மத்தியில்  மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.