சினிமா உலகில் பிரம்மாண்டம் என்றால் நாம் நினைவிற்கு முதலில் வரும் பெயர் ஷங்கர் தான் ஏனென்றால் இவர் எடுக்கும் படங்கள் ஒவ்வொன்றும் குறைந்தது 100 கோடிக்கு மேல் தான் படங்களை எடுக்கிறார் இதனாலையே அவரை செல்லமாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் என அழைப்பது வழக்கம்.
இவர் இதுவரை ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன், நண்பன், எந்திரன், 2.0 என சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு பல ஹிட் படங்களை எடுத்தவர். இப்பொழுது உலகநாயகன் கமலஹாசனை வைத்து இந்தியன் 2 என்னும் படத்தை எடுத்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் ஷங்கர் பற்றிய செய்து ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
ஷங்கரை வளர்த்து விட்டவர்களின் முக்கியமான தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோகன் தான்..
ஆனால் அந்த தயாரிப்பாளருக்கு ஒரு கஷ்டம் என வந்த பொழுது ஷங்கர் உதவி செய்யவில்லையாம் இதனை தயாரிப்பாளர் கே.டி குஞ்சுமோகன் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்..
ஷங்கர் ஜென்டில்மேன் படத்தின் கதையை உருவாக்கிய பிறகு பல தயாரிப்பாளர்கள் இடம் சொன்னார் ஆனால் எந்த தயாரிப்பாளருமே படம் எடுக்க விரும்பவில்லை கடைசியாக ஒரு நாள் கே டி குஞ்சுமோகனை பார்த்து கதை சொல்லி இருக்கிறார் அது அவருக்கு ரொம்ப பிடித்து போகவே படமாக உருவானது.. இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் சார் இந்த படத்தில் பணியாற்றினால் நன்றாக இருக்கும் என கேட்க அதற்கும் குஞ்சு மோகன் ஓகே சொன்னாராம்..
படத்தின் நாயகனாக முதலில் சரத்குமாரை தான் கேட்டிருந்தார் ஆனால் அவருக்கு அந்த கதை பிடிக்கவில்லை பிறகு டாக்டர் ராஜசேகர் கிட்ட கேட்க அவருக்கு கால்ஷீட் பிரச்சனையால் பண்ண முடியவில்லை இதை தொடர்ந்து அர்ஜுன் இந்த படத்தில் ஹீரோவாக நடித்தார் படத்தினை முதலில் யாரும் வாங்க முன்வரவில்லை.
தொடர்ச்சியாக பல பிரச்சனைகளை சந்தித்த பிறகு ரிலீஸ் செய்யப்பட்டது படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது ஷங்கருக்கு தயாரிப்பாளர் சொந்தமாக ஒரு பிளாட், கார் வாங்கி கொடுத்தார்.ஆனால் கே டி மோகனுக்கு பணம் கஷ்டம் இருந்த பொழுது எந்த ஒரு உதவியும் செய்ய அவர் முன் வரவில்லையாம் இதனை ஆதங்கத்துடன் கூறி இருக்கிறார் கே டி குஞ்சு மோகன்.