தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகர்களும் ஒவ்வொரு காலகட்டத்தில் முன்னிலையில் இருப்பார்கள், அதேபோல்தான் இயக்குனர்களும், ஒரு சில இயக்குனர்கள் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருவார்கள், வசூலிலும் கல்லா கட்டுவார்கள்.
அந்தவகையில் நீண்ட காலமாக முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் இயக்குனர் ஷங்கர், ஷங்கர் என அழைப்பவர்களை விட பிரமாண்ட இயக்குனர் என்று தான் அழைப்பார்கள், பல பிளாக்பஸ்டர் திரைப் படங்களை கொடுத்துள்ளார், தமிழ் சினிமா இயக்குனர்களிலேயே அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர் என்றால் ஷஙகர் என கூறுகிறார்கள்.
கிட்டத்தட்ட ஷங்கர் 30 கோடிக்கு மேல் சம்பளமாக வாங்குகிறார் என கோலிவுட் வட்டாரத்தில் கூறுகிறார்கள், ஷங்கர் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படங்கள் பலவும் மெகா ஹிட் படம்தான். அதேபோல் ஷங்கரின் திரை படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த அட்லி சமீபகாலமாக இயக்கிய நான்கு திரைப்படங்களும் பெரிய அளவில் சாதனை படைத்துள்ளது.
முதன்முதலில் அட்லி இயக்கத்தில் வெளியாகி ராஜா ராணி திரைப்படம் 50 கோடி வசூல் ஈட்டியது அதனைத் தொடர்ந்து தெறி திரைப்படம் 150 கோடியும் மெர்சல் திரைப்படம் 250 கோடியில் பிகில் 300 கோடியும் வசூல் ஈட்டியது, அதனால் அட்லியின் சம்பளம் தற்போது சராசரியாக 30 கோடி இருக்கும் என கோலிவுட் வட்டாரங்களில் கூறுகிறார்கள்.
இதில் ஒன்று என்னவென்றால் சினிமா வட்டாரத்தில் ஷங்கருக்கு இருக்கும் நல்ல பெயர் அட்லீக்கு கிடையாது ஏனென்றால் அட்லி சரியான பட்ஜெட்டை கொடுக்க முடியவில்லை அதனால் தயாரிப்பாளர்கள் அவஸ்தைப்படுபவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இதனால் அட்லியை வைத்து படம் இயக்க மாட்டோம் என பல தயாரிப்பாளர்கள் கூறிவிட்டார்களாம்.
அதுமட்டுமில்லாமல் பட ஷூட்டிங் நடக்கும் பொழுது தன்னுடைய மனைவியையும் அழைத்துக்கொண்டு செலவை அனைத்தையும் தயாரிப்பு தரப்பில் கட்டுவதாக கூறுகிறார்கள் அதனால் இனி அட்லீக்கு பட வாய்ப்பு என்பது கேள்விக்குறிதான். இருந்தாலும் சில படங்களை மட்டும் இயக்கி விட்டு சங்கரையே மிஞ்சும் அளவுக்கு சம்பளம் பெறுவார் என தெரிகிறது.