தமிழ் சினிமாவில் அர்ஜுன் கவுண்டமணி ஆகியோர் நடிப்பில் வெளியாகிய ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சங்கர் இவர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
இயக்குனர் ஷங்கர் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். பின்பு உதவி இயக்குனராக தனது பணியை தொடர்ந்து தற்போது முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். சந்திரசேகர் அவர்கள் ஒரு சில திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.
சீதா : ரகுமான், சரத்குமார், கனகா ஆகியோர்கள் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் சீதா இந்த திரைப்படத்தில் சந்திரசேகர் இயக்குநர் ஷங்கருக்கு ஒரு காட்சியில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார். ஷங்கர் அவர்களும் அந்த சிறிய காட்சியில் மட்டுமே நடித்துள்ளார்.
ஷங்கரின் நடிப்பை இங்கே காணலாம்.!
வசந்த ராகம்: இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் ரகுமான் விஜயகுமார் மற்றும் செந்தில் என பல நட்சத்திரங்கள் நடித்த திரைப்படம் வசந்த ராகம் இந்த திரைப்படத்தில் இயக்குனர் ஷங்கர் பிரின்டிங் பிரஸ் அலுவலகத்தில் வேலை பார்ப்பது போல் நடித்து இருப்பார்.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
இந்தியன்: சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் கவுண்டமணி செந்தில் மனிஷா கொய்ராலா ஆகியோர்கள் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகிய திரைப்படம் இந்தியன் இந்த திரைப்படத்தில் சங்கர் போலீஸ் கதாபாத்திரத்தில் ஒரு சிறிய காட்சியில் நடித்து இருப்பார்.
சிவாஜி தி பாஸ் : ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஸ்ரேயா சரண், விவேக் மணிவண்ணன், ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் சிவாஜி தி பாஸ் இந்த திரைப்படத்தில் நயன்தாரா பல்லேலக்கா என்னும் பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார் படத்தின் தயாரிப்பாளர் கே வி ஆனந்த் இந்த திரைப்படத்தில் சங்கர் இந்த திரைப்படத்தில் படத்தின் தயாரிப்பாளர் மொபைல் போனை கேட்டு தூக்கி எறிவது போல் நடித்து இருப்பார்.
நண்பன் : விஜய் ஜீவா ஸ்ரீகாந்த் இலியானா ஆகியோர் நடிப்பில் உருவாக்கிய திரைப்படம் நண்பன் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது இந்த திரைப்படத்தில் அஸ்க்கு அஸ்க்கு என்ற பாடலை இயக்குவது போல் சங்கர் சில காட்சிகளில் நடித்து இருப்பார்.