சினிமாவில் பல குழந்தை நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள், சினிமாவில் நடிக்கும் குழந்தை நட்சத்திரம் அனைவரும் பிரபலம் ஆகி விடுகிறார்கள் என கூற முடியாது, ஒரு சிலரே மிகவும் பிரபலமாகி விடுகிறார்கள் அப்படி குழந்தை நட்சத்திரமாக மிகவும் பிரபலமாக்கிய ஒருவரை இங்கே காணலாம்.
குழந்தை நட்சத்திரமாக மிகவும் பிரபலமாகியவர்களில் பேபி சாமிலியும் ஒருவர் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். பேபி சாமிலி குழந்தை நட்சத்திரமாக 1990ஆம் ஆண்டு அஞ்சலி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.
அந்த திரைப்படத்தில் மனநலம் குன்றிய குழந்தையாக நடித்திருந்தார், அதுமட்டுமில்லாமல் அந்த திரைப்படத்திற்காக தேசிய விருதை தட்டிச் சென்றார், அந்த திரைப்படத்தை தொடர்ந்து துர்கா, சிவசங்கரி, சின்ன கண்ணம்மா, தைப்பூசம் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
அதன்பிறகு இவர் புதிதாக எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை பின்பு 2000 ஆண்டு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் ஐஸ்வர்யாராய்க்கு தங்கையாக நடித்தார். இப்படி நடித்து வந்த இவர் ஒரு காலகட்டத்தில் எந்தவொரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை, தனக்கு நடிப்பு தெரிய வரவில்லை என்று அவரே முடிவு செய்து விட்டார் போல.
இந்த நாளில் முன்னணி நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு புடவையில் அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார், இதைப்பார்த்த ரசிகர்கள் கண்டமேனிக்கு வர்ணித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் செல்லம் புஜிலி என கொஞ்சி கொஞ்சி வருகிறார்கள்.