நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பொழுது நடிகை சமீரா நடத்திய போட்டோஷூட்.!

பொதுவாக நடிகைகள் சினிமாவிற்கு அறிமுகமான தனது முதல் படத்திலேயே பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருப்பார்கள். அப்படிப்பட்ட சிலர் திருமணத்திற்குப் பிறகு பெரிதாக சினிமாவில் ஆர்வம் காட்டாமல் சினிமாவை விட்டு மொத்தமாக விலகி செட்டில் ஆகிவிடுவார்கள்.

அந்த வகையில் ஒருவர் தான் நடிகை சமீரா ரெட்டி இவர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து தல அஜித்துடன் இணைந்து அசத்தல் அதன் பிறகு நடுநிசி நாய்கள், வேட்டை, வெடி போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

அதன்பிறகு 2014 ஆம் ஆண்டு தொழிலதிபர் அக்ஷய் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இவர்களுக்கு ஹென்ஸ், நைரா என்ற ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் இவருக்கு 2018ஆம் ஆண்டு நைரா என்ற பெண் குழந்தை பிறந்தது. அவ்வபொழுது சமீரா சும்மிங் புல்லில் நடுவில் இருந்து போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் தற்பொழுது அந்த புகைப்படம் இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.