தமிழ் சினிமாவில் கதாநாயகிகளின் தோழியாக தொடர்ந்து நடித்து வருபவர் ஷாலு ஷம்மு இவர் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சையான பதிவை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது மேக்கப்மேன் தோழிக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சிவகார்த்திகேயன் மற்றும் பரோட்டா சூரி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது இந்த திரைப் படத்தில் ஹீரோயினாக ஸ்ரீதிவ்யா நடித்திருந்தார் இவருக்கு தோழியாக நடித்திருந்தவர் ஷாலு ஷம்மு.
ஷாலு ஷம்மு நாகர்கோவிலை சேர்ந்தவர், சென்னையில் எத்திராஜ் கல்லூரியில் படித்தவர், இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் கற்பனையாக ஒரு கிராமத்துப் பெண் போல் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் சதீஷ்க்கு காதலியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் ஷாலு ஷம்மு மஞ்சள் நிற உடை அணிந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள். அதுவும் வடிவேல் மீம்ஸ் வைத்து கலாய்த்து வருகிறார்கள்.