சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இத்திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக அமைந்ததால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. அதோடு இத்திரைப்படத்தில் நடித்திருந்த ஒவ்வொரு கேரக்டரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது.
அந்த வகையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்து இருந்தார் இவரின் தோழியாக நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை ஷாலு ஷம்மு. இவர் இதற்கு முன்பு சில படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் ஆனால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் தான் இவருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.
இத்திரைப்படத்திற்குப் பிறகு தொடர்ந்து இவருக்கு காமெடி கதாபாத்திரத்திலும் துணை நடிகையாக மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் இவர் பெரிதாக நடிக்க விரும்பவில்ல. கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையால் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
காமெடியால் ரசிகர்களை கவர்ந்த ஷாலு ஷம்மு இதற்குமேல் கவர்ச்சி நடிகையாக நடிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியில் சென்று குடையைப் பிடித்துக்கொண்டு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் லாக் டவுன் நேரத்தில் அரைகுறை ஆடையோடு வெளியில் சுற்றி திரிகிறீர்களா. உள்ளிட்ட இன்னும் பல கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.