பட வாய்ப்பு இல்லை என்றாலும் கோடியில் கார் வாங்கியுள்ளாரா ஷாலு ஷம்மு.? ஆத்தாடி அதுவும் ஜாகுவார் காராச்சே.?

shalu shammu
shalu shammu

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானவர் ஷாலு ஷம்மு  இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் பரோட்டா சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார் இவர் 2008 ஆம் ஆண்டு சினிமா உலகிற்கு அறிமுகமானார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து என பல திரைப்படங்களில் நடித்திருந்தார். நாகர்கோவிலில் பிறந்த இவர் சினிமா பட வாய்ப்பு பெரிதாக கிடைக்கவில்லை என்றாலும் விலை உயர்ந்த காரை வாங்கும் அளவிற்கு வருமானம் வருகிறதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

காமெடி நடிகையாக வலம் வந்த ஷாலு ஷம்மு பட வாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சி ரூட் பக்கம் திரும்பினார் அதனால் சினிமா வாய்ப்பு இல்லாமல் போனது ஆனாலும் சின்னத்திரை தொடர்கள் ரியாலிட்டி ஷோக்கள் என எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. ஆனால் சில விளம்பர படங்கள் மற்றும் கடை திறப்பு விழாக்களுக்கு மட்டுமே சென்று வந்த நிலையில் எப்படி இவ்வளவு விலை உயர்ந்த காரை வாங்கினார் என பெரும் கேள்வி எழுந்துள்ளது,

காஸ்மெடிக் கிளினிக்கின் எக்ஸிக்யூட்டிவ் டைரக்டரே ஷாலு ஷம்மு தான் சினிமா பிரபலங்களின் ஸ்கின் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை நடத்தி வருவதால் தான் ஷாலு ஷம்மு இந்த அளவு சம்பாதித்து வருகிறார் என்றும் தன்னுடைய உழைப்பால் தான் தன் வாழ்நாள் கனவான ஜாகுவார் காரை தற்பொழுது வாங்கி உள்ளார் என கூறுகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் ஷாலு ஷம்மு 98 லட்சம் ரூபாய் கொடுத்து புதிய ஜாகுவார் கார் வாங்கவில்லை என்றும் அவர் 2018 ஆம் ஆண்டு மாடலான பயன்படுத்திய செகண்ட் ஹாண்ட் காரை தான் வெறும் 45 லட்சம் கொடுத்து hf கார் நிறுவனத்தில் வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. செகண்ட் ஹேண்ட் கார் தான் வாங்கியுள்ளார் என்பதால் அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களும் கேள்விகளும் தவிடுபடியாக உள்ளது.

shalushamu
shalushamu