நடிகர் அஜித்துடன் நடித்துள்ள ஷாலினியின் தங்கை ஷாமிலி.! எந்த திரைப்படத்தில் தெரியுமா பலருக்கும் தெரியாத தகவல்.

ajith-shalini
ajith-shalini

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் இவர் சமீபத்தில் H வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் திரைக்கு வந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நடிகர் அஜித்-ஷாலினி கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்  இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அதேபோல் இவர்கள் இருவரும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார்கள். ஷாலினியும் ஒரு நடிகை தான் இவர் மூன்று வயதில் இருந்தே  நடிக்க தொடங்கிவிட்டார். அதுபோல் மலையாள சினிமாவில் 25 திரைப்படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். ஷாலினிக்கு ஷாமிலி என்ற தங்கை இருக்கிறார். அதேபோல் ரிச்சர்ட் ரிஷி என்ற அண்ணனும் இருக்கிறார்.

ரிச்சர்ட் ரிஷி இதற்கு முன்பு திரவுபதி ருத்ரதாண்டவம் ஆகிய திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்துள்ளார்.ஷாலினி பல திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தது போல் ஷாலினியின் தங்கை ஷாமிலி படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அஜித்துடன் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத தகவலாக இருக்கிறது.

இரண்டாயிரமாண்டு மம்முட்டி, அஜித், அப்பாஸ் நடிப்பில் வெளியாகிய திரைப்படம்தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கி இருந்தார் மேலும் இந்த திரைப்படத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் மற்றும் தபுவின் தங்கையாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் ஷாமிலி.

ajith-shalini
ajith-shalini

ஷாமிலி அதன்பிறகு ஒரு தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார். அதேபோல் இவர் கதாநாயகியாக முதன்முதலில் சித்தார்த் திரைப்படத்தில் தான் நடித்தார் அதுமட்டுமில்லாமல் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகிய வீர சிவாஜி என்ற திரைப் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் அதன்பிறகு தமிழில் பெரிதாக நடிக்கவில்லை.

அதேபோல் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர் நடித்துள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரா என ஆச்சரியத்துடன் ஷேர் செய்து வருகிறார்கள்.

ajith-shalini
ajith-shalini