திரையுலகில் ஒரு காலத்தில் சிறந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷாலினி ஆவார். இவர் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக பந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பிள்ளை நிலா, விடுதலை, சங்கர் குரு, ராஜா சின்ன ரோஜா போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1997இல் தான் கதாநாயகியாக காதலுக்கு மரியாதை என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார் இதன் மூலம்தான் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அமர்க்களம், கண்ணுக்குள்-நிலவு, அலைபாயுதே, பிரியாதவரம் வேண்டும் உட்பட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத் திரையுலகிலும் பிரபலம் அடைந்தவர்.
இவர் பிரபல நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். திருமணத்திற்கு பிறகு ஷாலினி திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். திருமணத்திற்கு முன்பாக விஜயின் திருமணத்தின்போது கண்ணுக்குள்-நிலவு படத்தினை விஜயுடன் நடித்து வந்தார்.
அப்போது தான் விஜய்க்கு திருமணம் ஆனது அந்தநிலையில் அவருக்கு விருந்தளிக்கும் வகையில் இப்படத்தின் இயக்குனர் நடிகர், சார்லி மற்றும் ஷாலினி உட்பட இன்னும் சில நடிகர்கள் அவ்விழாவில் கலந்து கொண்டனர். விழாவின் போது எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த புகைப்படம்.