திரை உலகில் இருக்கும் நடிகர் நடிகைகள் நடிக்கும் பொழுதே காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொள்கின்றனர் அந்த வகையில் அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா என சொல்லிக்கொண்டே போகலாம் குறிப்பாக அஜித் ஷாலினி அமர்க்களம் திரைப்படத்தின் போது காதலித்து அதன் பிறகு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றன இப்பொழுது கூட இருவரும் காதலித்து தான் வருகின்றனர். அதனை உறுதிப்படுத்தும் வகையில் அஜித் ஷாலினி இருக்கும் புகைப்படங்களை பார்த்தாலே நமக்கு தெரியும். 30 நாளில் 15 நாள் ஷூட்டிங் 15 நாள் குடும்பம் என வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகிறார்.
அஜித். இப்படிப்பட்ட அஜித் ஷாலினி பற்றி ஒரு தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. சரண் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான திரைப்படம் அமர்க்களம் இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக ஷாலினி நடித்துக் கொண்டிருந்தார். இப்படத்தின் ஷூட்டிங் போது அஜித் ஷாலினியும் காதலிக்க ஆரம்பித்து விட்டனர்.
இது சரணுக்கும் நன்றாகவே தெரிந்து விட்டது இதனால் ஷாலினி காதலுக்கு சரண் அப்பொழுது உதவியும் செய்வாராம் அப்படி ஒரு சம்பவம் தான் அரங்கேறி உள்ளது. அமர்களம் படப்பிடிப்பு நடுவே அஜித்திற்கு பிறந்தநாள் வந்தது இதை அறிந்து கொண்ட ஷாலினி இயக்குனர் சரணிடம் ஒரு உதவி கேட்டுள்ளார் அஜித்திற்காக சில பரிசுகளை வாங்கி அவற்றை சரணிடம் கொடுத்து..
இரவு ஒரு மணிக்கு அஜித் வீட்டின் வாசலில் வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார் அதற்கு சரணும் உதவுவதாக சொல்லி சரியாக ஒரு மணிக்கு அஜித் வீட்டின் வாசலில் பரிசுகளை வைத்து விட்டு வந்தாராம். காலையில் பார்த்த அஜித்திற்கு ஒரே ஆச்சரியமாம்.. நம்ம அஜித்திற்கு பிடித்த பொருள்களை எல்லாம் பார்த்து பார்த்து ஷாலினி அனுப்பி இருந்தாராம் அதன் பிறகு அஜித் ஷாலினியின் காதல் அதிகரித்தது என கூறப்படுகிறது.