நடிகை ஷாலினி குழந்தை நட்சத்திரமாக முதலில் அடித்து பின் பருவ வயதை எட்டிய பிறகு மலையாளத்தில் ஹீரோயின்னாக இரண்டு படங்களில் நடித்தார் அதன் பிறகு தமிழில் என்ட்ரி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் காதலுக்கு மரியாதை என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து அமர்க்களம், அலைபாயுதே போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே..
ஹீரோயின்னாக நடித்து வந்த ஷாலினி நடிகர் அஜித் குமாரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவரும் அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது காதல் வயப்பட்டு பின் படம் முடிந்தவுடன் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றன இப்போது ஷாலினி படங்களில் நடிக்கவில்லை என்றாலும்..
ஆஜித் வருடத்திற்கு ஒரு வெற்றி படத்தை கொடுத்து ஓடி கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அஜித் – ஷாலினி திருமணமாகி 23 வருடங்கள் ஆன பிறகும் அதே காதல்,ரொமான்ஸ் உடன் தான் இருக்கின்றனர் அதை உறுதிப்படுத்தும் வகையில் 23 வது திருமண நாளை முன்னிட்டு ஷாலினி ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் – ஷாலினி பற்றி ஒரு தகவல் வைரலாகி வருகிறது அமர்களம் திரைப்படத்தில் முதலில் ஷாலினி நடிக்க வைக்க வாய்ப்பு கேட்டுள்ளனர் ஆனால் அப்பொழுது அவர் படித்துக் கொண்டிருந்ததால் நடிக்க முடியாது என மறுத்து விட்டார் அஜித் சென்று இந்தப் படத்தால் உங்களுடைய படிப்பு எந்த விதத்திலும் பாதிக்காது எனக் கூறி படத்தில் நடிக்க சம்மதம் வாங்கினாராம்..
படத்தின் ஷூட்டிங் போய் கொண்டு இருக்கும் போது ஒரு சண்டை காட்சி யில் எதிர்பாராத விதமாக ஷாலினி கை வெட்டப்பட்டது இதனால் ஷாலினி வலியில் ரொம்ப துடித்து விட்டார் அஜித் இப்படி ஒரு தப்பை செய்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் இருந்தாராம். தினமும் ஷாலினி வந்தவுடன் உங்கள் கை சரியாகி விட்டதா என கேட்டுக் கொண்டிருக்கிறார் இப்படி போகப் போக அது காதல் ஆரம்பித்தது இதை ஷாலினியும் உணர்ந்து கொண்டார் படத்தின் சூட்டிங் முடியும் தருவாயில் அஜித் பயத்துடன் காதலை சொல்லி இருக்கிறார் பிறகு ஷாலினி ஓகே சொல்ல காதலித்து பின் கல்யாணத்தில் முடிந்தனர்.