சமீபகாலமாக ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஷாலினி பாண்டே. இவர் 2017ஆம் ஆண்டில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றார்.
இப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றியைப் பெற்றதால் தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இப்படத்தில் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்ததால் ரசிகர்கள் இவரிடத்தில் எந்த நடிகையும் நடிக்க இயலாது என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறி இருந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த நடிகர் திலகம் திரைப்படத்திலும், ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து 100% காதல் படத்திலும் நடித்திருந்தார். பிறகு ஜீவா நடிப்பில் வெளிவந்த கொரில்லா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் இப்படங்கள் எதுவும் பெரிதாக சொல்லுமளவிற்கு அவருக்கு பாராட்டை தரவில்லை.
இதனைத் தொடர்ந்து அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த நிசப்தம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவருக்கு எந்த பாடமும் கை கொடுக்காத காரணத்தினால் தற்போது இவருக்கு தமிழ் திரை உலகில் எந்த படமும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையிலெடுத்து அம்மணி தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை சூடேற்றி வருகிறார். அந்த வகையில் தற்பொழுது நீண்ட நாட்களுக்கு பிறகு கடற்கரைக்கு சென்று தனது பின்னழகு புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.