முன்பெல்லாம் ஒரு நடிகை சினிமாவில் பிரபலமடைய வேண்டும் என்றால் தொடர்ந்து பல திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தால் மட்டுமே அவர்களால் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடிக்க முடியும். ஆனால் தற்போது உள்ள நடிகைகள் அப்படி கிடையாது கவர்ச்சியினால் தனது முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து விடுகிறார்கள். அதிலும் ஒரு சில நடிகைகள் பிரபலமடைந்து ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கிய பிறகு திரைப்படங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் தனது முதல் படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை ஷாலினி பாண்டே. இவர் சொல்லும் அளவிற்கு பெரிதாக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி என்ற ஒரே ஒரு திரைப்படத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலம்மடைந்தார்.
இத்திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைப்பதோடு மட்டுமல்லாமல் மற்ற மொழி திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் பாலிவுட்டில் மேரி நிமோ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் இதுவரையிலும் கிடைத்த புகழில் கொஞ்சம் சரிவை சந்தித்துள்ளது.
இதன் காரணமாக முன்பு போல் பெரிதாக படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுவது கிடைத்த சில திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் ஜீவாவுக்கு ஜோடியாக 100% காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது மட்டுமல்லாமல் தொடர்ந்து பல திரைப்படங்களில் வாய்ப்பையும் பெற்று வருகிறார்.
இவ்வாறு காதல் காட்சிகள் நிறைந்த திரைப்படத்தில் நடித்து வந்த இவர் இதற்கு மேல் கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதாக முடிவெடுத்துள்ளாராம் அந்த வகையில் பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாம் ஆனால் அதில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

அந்த வகையில் பாலிவுட்டில் பிரபல நடிகரான அமீர்கான் மகனுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்திற்கான டெக்னீசியன் வேலைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறியுள்ளார்கள்.