தனது தம்பியின் திரைப்படத்தை குட்டி தலையுடன் பார்த்து ரசித்த ஷாலினி..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

shalini-3
shalini-3

தமிழ் சினிமாவில் திரௌபதி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குனர் மோகன் உருவாகியுள்ள திரைப்படம் தான் ருத்ரதாண்டவம் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக ரிச்சர்ட் ரிஷி  மற்றும் நாயகியாக தர்ஷா குப்தா நடித்துள்ளார்.

மேலும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராதாரவி கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளது மட்டுமல்லாமல். இத் திரைப்படமானது போதை பழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதன் விளைவுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

இந்நிலையில் இந்த  திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் தல அஜித்தின் மச்சான் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் மேலும் ஷாலினி தன்னுடைய திருமணத்திற்கு பிறகு எந்தவொரு திரைப்படத்திலும் நடிக்காமல் நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டார்.

அந்த வகையில் தற்போது  தன்னுடைய  சகோதரர் நடித்த ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தை  பார்த்துவிட்டு படக்குழுவினர்களுக்கு நேரடியாக பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார் அப்பொழுது இயக்குனர் மோகன் ஜி அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

இவ்வாறு அந்த புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவியது மட்டுமல்லாமல் ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள். அந்த வகையில் தல அஜித்தின் மனைவி ஷாலினி ஜாதி மதம் பற்றி உருவான திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.

shalini-1
shalini-1

அந்தவகையில் மற்றொருவர் தரப்பினர்கள்  நல்ல திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்தாள் அதில் என்ன தவறு என்று அவர்களுக்கு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

shalini-2
shalini-2