அஜீத் மனைவி ஷாலினியுடன் திரிஷா எடுத்துக்கொண்ட புகைப்படம்.! அதிலும் ரெண்டு பேரும் ஒரே கலர் டிரஸ்.

சினிமாவில் பல நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு பெரிதாக திரைப்படங்களில் ஆர்வம் காட்டாமல் செட்டில் ஆகிவிடுகிறார்கள்.அந்தவகையில் 90 காலகட்டத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து பிரபலம் அடைந்தவர் தான் நடிகை ஷாலினி.

இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.  அந்த வகையில் இவர் கதாநாயகியாக நடித்து இருந்த அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் பெற்றது.

இவ்வாறு புகழின் உச்சத்தில் இருந்து வந்த இவர் தல அஜீத்தை திருமணம் செய்து கொண்டு திருமணத்திற்கு பிறகு பெரிதாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் பேட்மிட்டன் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் தனது ஆர்வத்தை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தல அஜித்தை போலவே இவரும் பெரிதாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார் தல அஜித்தை பார்ப்பது எவ்வளவு கடினமோ அதேபோல ஷாலினியும் வெளிவராமல் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் திரிஷாவுடன் இணைந்து மாடர்ன் உடையில் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த புகைப்படம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பொழுது எடுத்ததா இல்ல படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படமா என்று சரியாக தெரியவில்லை. இதோ அந்த புகைப்படம்.