மக்கள் கூட்டம் கூடும் இடத்திற்கு திடீரென விசிட் அடித்த ஷாலினி மற்றும் அவரது மகன் ஆத்விக்.! சுத்தி வளைச்சி புகைப்படம் எடுத்துக்கொண்ட ரசிகர்கள்.? இதோ நீங்களே பாருங்கள்.

shalini-and-aathvik

சினிமா உலகில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான திரைப்படங்கள் வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி கின்றது ஆனால் சமீபகாலமாக கொரோனா தொற்றால் திரைப்படங்கள் உருவாகினாலும் ஒருசில படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் எனது படத்தை நாங்கள் திரையரங்கில் தான் விடுவோம் என ஒத்த காலில் நின்றனர்.

ஒருசில படத்தின் தயாரிப்பாளர் எங்களுக்கு காசுதான் முக்கியம் என கூறி தனது படத்தை OTT தளத்திற்கு விற்று விடுவார்கள் அப்படியும் அரங்கேறியும் உள்ளது. ஆனால் தற்போது கொரோனா பிரச்சனையை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து உள்ளதோடு மட்டுமல்லாமல் திரையரங்குகளும் 50% அரசு அனுமதியுடன் திறக்கப்பட்டுள்ளதால் தற்பொழுது படங்கள் அனைத்தும் திரையரங்கில் அதிகமாக வெளியாகின்றன மக்களும் ஆர்வத்துடன் வந்து படத்தை கூட்டம் கூட்டமாக பார்க்கின்றனர்.

அந்த வகையில் தற்போது வெளியாகி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள திரைப்படம்தான் ருத்ரதாண்டவம் இந்த திரைப்படத்தை மோகன்ஜி அவர்கள் இயக்கியுள்ளார் ஹீரோவாக அஜீத்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ளார். இந்த கூட்டணி ஏற்கனவே திரௌபதி என்னும் சூப்பர் படத்தை கொடுத்த நிலையில் இந்த படம் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் படத்தை பார்த்து வருகின்றனர்.

மேலும் படம் சிறப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இதனால் மேலும் மக்களின் கூட்டம் திரையரங்குக்கு வந்த வண்ணமே இருக்கின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் ருத்ர தாண்டவம் திரைப்படத்தை நடிகை ஷாலினி மற்றும் அவரது மகன் ஆத்விக் ஆகியோர் திரையரங்குக்கு வந்து கண்டுகளித்துள்ளனர்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது அதில் ஒரு புகைப்படம் இவர்கள் திரையரங்கில் படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ நீங்களே பாருங்கள்.

shalini-and-aathvik