ஹச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் துணிவு. இந்த படம் முழுக்க முழுக்க பணத்தை மையமாக வைத்து முழு ஆக்க்ஷன் திரைப்படமாக உருவாக்கி உள்ளது. இதில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அவருடன் கைகோர்த்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி..
போன்ற மிகப் பெரிய டாப் நடிகர், நடிகைகள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர் அதேசமயம் பிக்பாஸ் பிரபலங்களான சிபி, அமீர், பாவனி போன்றவர்களும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. துணிவு திரைப்படம் வருகின்ற 11ஆம் தேதி கோலாகலமாக உலக அளவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
அதற்கு முன்பாக ரசிகர்கள் பட்டாளத்தை கவர்ந்து இழுக்கப் படக்குழு அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது மேலும் பேட்டி கொடுக்கும் வருகிறது. அப்படி அண்மையில் ஹச். வினோத் பேட்டி ஒன்றில் துணிவு திரைப்படம் குறித்து பேசுகிறார் முதல் பாதி ரசிகர்களுக்கான படமாக இருக்கும் இரண்டாவது பாதி முழு ஆக்சன் நிறைந்த படமாக இருக்கும் என கூறியுள்ளார்.
இதனால் துணிவு படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு திரைப்படத்தின் பிரிமியர் காட்சி நேற்று போடப்பட்டது இதை தயாரிப்பாளர் போனி கபூர், வீடியோஸ்தர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அஜித்தின் மனைவி ஷாலினி குடும்பமும் படத்தைப் பார்த்துவிட்டு வந்துள்ளனர்.
பிறகு தயாரிப்பாளர்கள் போனி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு விசில் அடிக்கும் எமோஜியை போட்டிருக்கிறார் இதை அறிந்த ரசிகர்கள் அப்படி என்றால் படம் சிறப்பாக வந்து உள்ளதை மறைமுகமாக சொல்கிறீர்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். நிச்சயம் இந்த பொங்கல் அஜித்தின் துணிவு பொங்கல் என பலரும் கூறி வருகின்றனர்.