4 மணி நேரம் நடுரோட்டில் தனது மனைவி ஷாலினியுடன் காத்திருந்த அஜித்.! உண்மையை உடைத்த தயாரிப்பாளர்

ajith
ajith

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் மூன்றாவது முறையாக துணிவு திரைப்படத்தின் மூலம் கூட்டணி சேர்ந்துள்ளனது.

இந்நிலையில் நடிகர் அஜித்குமார் துணிவு படத்தின் பட பிடிப்பு 70 சதவீதத்திற்கும் மேல் படமாக்கப்பட்டுள்ளது மீதமுள்ள காட்சிகளை பாங்காங்கில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித்குமார் துணிவு படப்பிடிப்பின் போது இடையிலேயே பைக் பயணம் சென்றுள்ளார்.

அதன் பிறகு நீண்ட நாட்கள் கழித்து பைக் பயணத்தை முடித்துவிட்டு திரும்பவும் துணிவு படத்தின் படப்பிடிப்பில் சேர்ந்து கொண்டார். இதனை தொடர்ந்து சமீபத்தில் துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வந்தது அது மட்டுமல்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் தானு அவர்கள் அஜித் மற்றும் அஜித்தின் மனைவி ஷாலினி ஆகிய இருவரும் நான்கு மணி நேரம் ரோட்டில் நின்றதாக கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மனதை நெகிழ வைத்துள்ளது. அவர் கூறியவுடன் அஜித் மீதான மதிப்பும் கூடிவிட்டது.

தயாரிப்பாளர் தானு கூறியதாவது தாணுவின் மனைவி 2001 ஆம் ஆண்டு இறந்த போது அஜித் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் பைக்கில் வந்து நான்கு மணி நேரம் ரோட்டிலேயே காத்திருந்தாராம். அப்போதுதான் தானு அவர்கள் சிங்கப்பூரில் இருந்து வந்து கொண்டிருந்தாராம்.

அது மட்டுமல்லாமல் தன்னுடைய படத்தை தயாரித்த தயாரிப்பாளரின் சோகத்திற்கு ஆறுதல் கூறவும். அவருடைய துன்பங்களை பங்கு போட்டுகொள்ளவும் அஜித் செய்த செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

அஜித் நடிப்பில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தை தயாரித்தவர்தான் தானும். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், தபு, மம்முட்டி, அப்பாஸ் உள்ளியிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலுடன் நடிகர் அஜித் மீண்டும் தனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் அவர் படத்தை நான் தயாரிக்க தயார் என்று கூறியுள்ளார்.