ஷாலினி அஜித்தை நினைத்தால் தான் இந்த டயலாக் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது.! யார் சொன்னார் தெரியுமா.?

shalini

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் மாதவன். இவர் நடித்து 2000 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அலைபாயுதே இப்படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் அவர்கள் இயக்கியிருந்தார் இப்படத்தில் ஹீரோயினாக அஜித்தின் மனைவி ஷாலினி அவர்கள் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் வெளியாகி இதுவரை 20 வருடங்கள் ஆகி உள்ளது ஆனால் தமிழ் மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் இன்றளவும் பிரபல படங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.இப்படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வெற்றி பெற்றது அதுமட்டுமல்லாமல் வசூல் சாதனையும் படைத்தது. இந்த படத்தில் மிகவும் பிரபலமான டயலாக் எதுவென்றால் மாதவன் அவர்கள் ரயில்வே ஸ்டேஷனில் ஷாலினியை பார்த்து நீ அழகா என்ன நினைக்கல என்று நீளமான வசனத்தை பேசியிருப்பார் இந்த டயலாக் இன்றுவரைளும்  ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆக உள்ளது.

சமிபத்தில் மாதவன் அவர்கள்  இது போன்று நீளமான டயலாக் யாருக்கும் இருந்ததில்லை ஆனால் எனக்கு மட்டும் ஏன் நீளமான டயலாக் என மணிரத்னத்திடம் கேட்டிருந்தது  அண்மையில் கூறியிருந்தார் இந்த நிலையில் தற்போது இப்படத்தின் இந்த டயலாக் சக்ஸஸ் ஆக இருக்க காரணம் என்பதை நம்மிடம் பகிர்ந்துள்ளார் மாதவன்.

madhavan
madhavan

இந்தக் காட்சியை படமாக்கும்போது முதலில் எனது மனைவி சரிதா வைத்தான் நான் நினைத்துக்கொண்டேன் அதுபோல ஷாலினி அவர்கள் தனது காதலரான தல அஜித் அவர்களை இணைத்துக் கொண்டார் என கூறினார் இரண்டு விஷயங்களால் தான் இந்த டயலாக் மிகப்பெரிய ஹிட் அடிக்க காரணம் என தற்பொழுது கூறியுள்ளார் மாதவன்.