தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கிறாரா ஷாலினி அஜித் – இயக்குனர் வெங்கட்பிரபு சொல்லும் பதிலை பாருங்கள்.!

shalini-ajith-
shalini-ajith-

தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பின் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிய பின் சினிமாவில் ஹீரோயினாக கால் தடம் பதித்தவர் நடிகை ஷாலினி. ஷாலினி தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், மாதவன் போன்ற பலருடன் நடித்து மேலும் பிரபலமடைந்தார் இப்படி ஓடிக் கொண்டிருந்த..

இவர் அஜித்தின் அமர்க்களம் திரைப்படத்தின் போது காதல் வயப்பட்டு பின் அஜீத்தும், ஷாலினியும் திருமணம் செய்து கொண்டனர் அதன் பின் குடும்ப பொறுப்பை வந்ததால் வேறு வழி இல்லாமல் ஷாலினி குடும்பத்தை கவனிக்க அஜித் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இது இப்படியிருக்க வெங்கட்பிரபு இயக்கிய மன்மதலீலை படத்தின் புரமோஷனுக்காக பேட்டி ஒன்று கொடுக்கப்பட்டது.

ஷாலினி அஜித் குறித்து தொகுப்பாளர் கேள்வி கேட்டார். அஜித்- ஷாலினி சமீபத்தில் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்டு ஷாலினி அவர்கள் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவார்களா என கேட்டனர் இதற்கு வெங்கட்பிரபு சொன்னது.. எதுக்குடா ஃபேமிலி இல்ல வந்து கை வைக்கிற என்று அஜீத் நடிப்பார் என கிண்டலாக சொல்லியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் ஷாலினி குடும்பத்தைப் பார்ப்பதில் ரொம்ப பிசியாக இருக்கிறார் இரண்டு குழந்தைகளையும் கவனித்து வருகிறார் இதனால் கண்டிப்பாக ஷாலினி மீண்டும் சினிமாவில் நடிக்க மாட்டார் என உறுதியாக கூறினார் வெங்கட் பிரபு.

உண்மையில் சொல்லவேண்டுமென்றால் ஷாலினி அஜீத்தை திருமணம் செய்துகொண்ட பிறகு குடும்பப் பொறுப்பு அதிகமானதால் அப்பொழுது அவர் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை விட்டுவிட்டார் இனியும் அவர் சினிமாவில் நடிக்க விரும்பவில்லை இதுவே உண்மையும் கூட..