ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். இவர் சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலமடையாத காரணத்தினால் இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை தொடங்கினார்.
அந்த வகையில் மொட்டை மாடியில் எனது இடுப்பு அழகு தெரியும் வழிநடத்திய ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இவ்வாறு தனது இடுப்பு தெரிய வெளியிட்ட இவரின் புகைப்படத்தை தற்போது காப்பியடித்து சாக்ஷி அகர்வால் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சாக்ஷி அகர்வால் கலாய்த்து வருகிறார்கள்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த காலா திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார் சாக்ஷி அகர்வால்.இத்திரைப்படத்தினை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.இந்த இரண்டு திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்ததால் சொல்லுமளவிற்கு பிரபலமடையவில்லை.
இந்நிலையில் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார். இந்நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா, சாக்ஷி அகர்வால் இவர்களின் காதல் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.இதன் மூலம் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த டெடி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் ஹீரோயினாக நடித்து வரும் சில திரைப்படங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
இப்படிப்பட்ட நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது ரம்யா பாண்டியன் மொட்டை மாடியில் நடத்திய போட்டோ ஷூட்டை காப்பியடித்து இவரும் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் கலக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்.