வித்தியாசமாக காதலர் தினத்தை கொண்டாடிய சாக்ஷி அகர்வால்!!பாராட்டும் ரசிகர்கள்..வைரலாகும் புகைப்படம்

sakshi agarwal
sakshi agarwal

பிக்பாஸ் சீசன் 3 மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால்.  இவர் ரஜினி நடிப்பில் வெளிவந்த காலா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்த இவருக்கு தற்போது சில படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

தொடர்ந்து இணையதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.  இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் சாக்ஷி அகர்வால் நேற்று நடந்த காதலர் தினத்தை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு அளிக்கும்,பரிசுகள் வழங்கியும் கொண்டாடியுள்ளார்.

அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த பலர் சாக்ஷிக்கு பாராட்டுகளை குவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.