Vadivelu : 90களில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் ஷகீலா. இவர் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். இப்படிப்பட்ட ஷகீலா நீண்ட இடைவேளைக்குப் பிறகு விஜய் தொலைக்காட்சியில் பிரபல காமெடி ஷோவாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி கோமாளி 2 வில் கலந்துகொண்டு நீண்ட துரம் பயணித்து மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
நடிகை சகிலாவிற்கு இதற்கு முன் இருந்த ஒரு நெகட்டிவ் பிரேம் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் முற்றிலுமாக மாறியது. தற்போது ஷகீலா youtube-ல் நடிகர் நடிகைகளை பேட்டி எடுத்து வருகிறார். இவர் அண்மையில் காமெடி நடிகர், நடிகைகள் மற்றும் பயில்வான் ரங்க நாதனை பேட்டி எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது ஷகீலா நடிகை பிரேமப் பிரியாவை பேட்டி எடுத்துள்ளார்.
பிரேம பிரியா வடிவேலு விவேக் சந்தானம் போன்ற நடிகர்களின் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தவர். ஷகிலாவுக்கு அளித்த பேட்டியில் பிரேம பிரியா எனது வளர்ச்சியை தடுத்ததே வடிவேலு தான் என்று பேசி இருக்கிறார். எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது, நானும் சூட்டிங் போவேன். ஆனால் அங்கு வடிவேலு என்னை பார்த்தால் இந்த பெண் வேண்டாம் என திருப்பி அனுப்பி வைத்து விடுவார். இது மாதிரி பல படங்களில் நடந்திருக்கு. ஒருமுறை youtube சேனல் ஒன்றில் இதை பற்றி நான் சொல்லி இருந்தேன்.
அதற்கு ஒரு இயக்குனர் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு மறுப்பு வீடியோ வெளியிட சொன்னார் ஆனால் நான் உண்மையை தானே சொன்னேன் என்று முடியாது என சொல்லிவிட்டேன். பிறகு சுறா படத்தில் வடிவேலுவுடன் நடிக்கும் போது என்னை ஏன் வேண்டாம் என்று சொன்னீர்கள் என கேட்டேன் அதற்கு அவர் பதில் சொல்லவில்லை.. என பிரேம பிரியா சொல்லியதற்கு..
ஷகிலா நீ அப்பொழுதே அவர் மேல் மீ டூ புகார் கொடுத்திருக்க வேண்டிதானே என சொல்ல பிரேமா ப்ரியா அந்த பிரச்சனை எல்லாம் எங்களுக்கு இல்லை என சொல்ல அதற்கு ஷகிலா வடிவேலு பற்றி எனக்கு நன்றாக தெரியும் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி இருப்பார்.. என்ன கேட்பார் என்றும் தெரியும் என சகிலா கூறியிருக்கிறார்.