Shahrukh Khan’s office being converted into corona ward: ஷாருக்கான் பிரபல இந்தி திரைப்பட நடிகர் ஆவார். இவர் கமலுடன் இணைந்து ஹேராம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தை கமலஹாசன் அவர்களே தயாரித்து நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் ஷாருக்கான கமலஹாசனின் நண்பனாக முக்கிய ரோலில் நடித்திருந்தார். மேலும் சென்னை எக்ஸ்பிரஸ் போன்ற படங்களின் மூலம் தமிழ் திரை உலகில் அவருக்கென சில ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.
உலகமே கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு, இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளி, கல்லூரி, கோவில், மால்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொழிலதிபர்கள், திரைப்பட பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், தொண்டுநிறுவனங்கள் என அனைவரும் தங்களால் முடிந்த உதவியை மத்திய மாநில அரசுக்கு நன்கொடையாக கொடுத்து வருகின்றனர்.
மேலும் ஹோட்டல், அலுவலகம், கல்லூரி போன்றவற்றை கொரோனாவால் பாதித்தவர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்திருக்கிறார்கள்.
அந்தவகையில் நடிகர் ஷாருக்கான் மும்பையில் இருக்கும் தனது நான்கு மாடிக் கட்டிடத்தை கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசிடம் ஒப்படைத்துள்ளார். தற்போது அந்த அலுவலகத்தை எப்படி கொரோனா வார்டாக மாற்றி உள்ளார்கள் என்பதை வீடியோவாக சமூகவலைதளத்தில் ஷாருக்கான் மனைவி அவர்கள் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது.
Whenever the country needs him, he comes, that's why he rules over billions of hearts… A true Dilwala ❤️ @iamsrk pic.twitter.com/tKilrI7ihj
— VEER PAAAJI ? (@vEEr_pAAji) April 22, 2020