Jawan Official Box Office: ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிபெறமாக ஓடிக் கொண்டிருக்கும் ஜவான் படத்தின் நான்காவது நாள் வசூல் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ரெட் சில்லீஸ் நிறுவனம் தற்போது சோசியல் மீடியாவில் அறிவித்துள்ளது. அப்படி ரஜினியின் ஜெயிலர் படத்தினை விட ஷாருக்கானின் ஜவான் தான் அதிக வசூலை பெற இருப்பதாக கூறப்படுகிறது.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் பல கோடி பட்ஜெட் உருவான ஜவான் திரைப்படத்தினை ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்தது. இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க, வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இவர்களுடைய நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது.
இந்த சூழலில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் மொத்தமாக 525 கோடி வசூல் செய்ததாக சன் பிரக்சஸ் நிறுவனம் கடைசியாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு இதற்கான சக்சஸ் பார்ட்டியும் நடத்தினார்கள். ஆனால் தற்பொழுது அதனை வெறும் 4 நாட்களில் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் நெருங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 7ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியான ஜவான் திரைப்படம் வெறும் நான்கு நாட்களிலேயே 500 கோடி வசூல் செய்து விட்டதாகவும் இன்னும் திரையரங்குகளில் கூட்டம் குறைவில்லை எனவும் கூறுகின்றனர். கலவை விமர்சனங்கள் இருந்து வந்தாலும் வசூலில் எந்த ஒரு குறைவும் கிடையாது என தெரிவிக்கப்பட்டது.
அப்படி தினமும் 100 கோடிக்கும் அதிகமாக ஜவான் திரைப்படம் வசூலை ஈட்டி வருகிறது. அப்படி இதே வேகத்தில் வந்தால் இரண்டாவது வாரத்தில் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிடும் என்கின்றனர். இதனையடுத்து தற்பொழுது வெளியாகி இருக்கும் தகவலின் படி ஜவான் திரைப்படம் கடந்த நான்கு நாட்களில் அதிகாரப்பூர்வமாக 520.79 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக சரியான வசூல் நிலவரத்தை ரெட் சில்லீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.