ஜவான் படத்தோடு கடைசி.. எந்த படத்திற்காகவும் இதை பண்ண மாட்டேன்.! ஷாருக்கான் பேட்டி

jawan
jawan

Jawan: இந்த விஷயத்தை ஜவான் மடத்தில் மட்டும் தான் செய்தேன். இனிமேல் எந்த ஒரு படத்திலும் இதை நான் பண்ணவே மாட்டேன் என ஷாருக்கான் பேட்டி அளித்திருக்கும் நிலையில் அது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர். இதற்கு முன்பு இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது.

ஜவான் படத்துக்கு ஹிந்தி மட்டுமல்லாமல் தமிழிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஜவான் படத்தின் மூலம் இயக்குனராக பாலிவுட்டுக்கு அட்லி அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில் முதல் படமே பல கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி ஷாருக்கான் நடிப்பில் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான பதான் படம் ரூ.1000 கொடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

அதேபோல் கண்டிப்பாக ஜவான் படமும் வசூலில் ஆயிரம் கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து ஷாருக்கான் மொட்டை தலையுடன் இருக்கும் காட்சிகள் ரசிகர்களுக்கு சப்ரைஸ்சாக இருக்கும் என கூறப்படுகிறது.

சமீபத்தில் ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது பட குழுவினர்கள் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாராவும் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமாகி இருக்கிறார்.

இந்நிலையில் ஜவான் படத்தின் ப்ரோமோஷன் பணியில் ஈடுபட்டு வரும் ஷாருக்கான் நேற்றைய துபாயில் Burj Khalifaவில் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அதில் ஷாருக்கான், அட்லீ, அனிருத் என பலரும் கலந்து கொண்ட நிலையில் அப்பொழுது பேசிய ஷாருக்கான், ஜவான் படத்திற்காக மொட்டை அடித்தேன்.. இதுவே கடைசி எந்த படத்திற்காகவும் மொட்டை அடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.